இதனால் அங்கு வரும் பார்வையாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
இதனை தடுப்பதற்காக சிலோசா கடற்கரையில் மூடுபனி குளிரூட்டும் முறையை அதிகாரிகள் சோதித்து வருவதாக சென்டோசா மேம்பாட்டு கழக உதவி இயக்குனர் மா லிஹாவோ தெரிவித்துள்ளார்.
சூரிய ஒளியை பிரதிபலிக்கவும் பகுதியை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் இந்த சுவர்கள் ஒரு சிறப்பு பாதுகாப்பாக இருக்கும் என்று அடுக்குடன் பூசப்பட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தீவில் தற்போது இரண்டு குளிரூட்டும் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டது.
2030 ஆம் ஆண்டிற்குள் மேலும் 8 குளிரூட்டு நிலையங்களை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த நிலையங்கள் அங்கு வரும் பொது மக்களுக்கு எளிதாக அணுகும் வகையில் அமையும் எனவும் தெரிவித்தனர்.