2027 முதல் சிங்கப்பூர் பள்ளிகளில் புதிய நடைமுறை..!! 6 பள்ளிகளில் சோதனை..MOE அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தவும், ஆசிரியர்களுக்கு வகுப்பறை கற்பித்தலில் அதிக கவனம் செலுத்தும் வாய்ப்பை வழங்கவும், புதிய முயற்சிகளை 6 பள்ளிகளில் பரிசோதிக்க கல்வி அமைச்சகம் (MOE) திட்டமிட்டுள்ளது.
2027ஆம் ஆண்டு முதல் பள்ளிகளில் வகுப்பறை அமைப்பை மறுவடிவமைப்பது தொடர்பாக இந்த முன்னோடி முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் தேவையான இடங்களில் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சிக்காக St Anthony’s Canossian Primary, Woodgrove Primary, Zhangde Primary, Commonwealth Secondary, Deyi Secondary மற்றும் Jurongville Secondary ஆகிய 6 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களின் கற்றல் தேவைகளுக்கு ஏற்ப சிறிய வகுப்புகள் எங்கு அதிக பயனளிக்கும் என்பதை இந்த முன்னோடி திட்டத்தின் மூலம் MOE ஆய்வு செய்ய உள்ளது.
சிறிய வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவருக்கும் கூடுதல் கவனம் செலுத்தவும், அவர்களின் கற்றல் தேவைகளுக்கு ஏற்ப பாடங்களை மாற்றியமைக்கவும், விரைவாக கருத்துகளை வழங்கவும் வாய்ப்பு கிடைக்கும் என MOE தெரிவித்துள்ளது.
வகுப்பறை கற்பித்தலுக்கு வெளியிலும் ஆசிரியர்கள் பல்வேறு பொறுப்புகளை மேற்கொள்கின்றனர். Form teacher பொறுப்பு, Co-Curricular Activities (CCA) மற்றும் பள்ளிக் குழு பணிகள் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை அவர்கள் கவனிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், ஆசிரியர்கள் இந்த மூன்று பொறுப்புகளில் இரண்டை மட்டும் மேற்கொள்ளும் வகையில் மாற்றம் செய்ய முடியுமா என்பதையும் MOE ஆய்வு செய்ய உள்ளது.
ஒவ்வொரு பள்ளியின் தேவைகள், ஆசிரியர்களின் திறமைகள் மற்றும் ஆர்வம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தப் பொறுப்புகள் ஒதுக்கப்படலாம்.
பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணிக்கும் ஆசிரியர்களே பொறுப்பேற்க வேண்டுமா என்பதையும் MOE மறுபரிசீலனை செய்ய உள்ளது.
தேவையற்ற பணிகளை நீக்குவது, பணிகளை எளிமைப்படுத்துவது, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மற்றும் ஆசிரியர்களுக்குப் பதிலாக மற்ற பணியாளர்கள் மேற்கொள்ளக்கூடிய பணிகளை அடையாளம் காண்பது போன்ற வழிகள் ஆய்வு செய்யப்பட உள்ளன.
CCA மற்றும் மாணவர் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஆசிரியர்களின் பங்கு தொடர்ந்து முக்கியமானதாக இருக்கும். அதே நேரத்தில் coaches, instructors, non-teaching staff மற்றும் வெளிப்புற நிறுவனங்களின் உதவியை அதிகமாகப் பயன்படுத்தவும் MOE திட்டமிட்டுள்ளது.
ஆசிரியர்களின் நேரத்தை மிச்சப்படுத்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த MOE திட்டமிட்டுள்ளது.
சுமார் 20 பள்ளிகளில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வரும் Teacher Workspace தளம், 2027ஆம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்த தளத்தின் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேவையான ஆதரவை ஒருங்கிணைப்பது, பெற்றோர் மற்றும் பிற கூட்டாளிகளுடன் தொடர்பு கொள்வது போன்ற பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.
மேலும், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இதில் சேர்க்கப்பட உள்ளன. உதாரணமாக, மாணவர்கள் தொடர்பான தகவல்களை ஒருங்கிணைத்து நிர்வாக அறிக்கைகளின் ஆரம்ப வரைவை உருவாக்க AI பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் ஆசிரியர்களின் கைமுறை நிர்வாகப் பணிகளை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 6 பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் முன்னோடி திட்டத்தின் முடிவுகளை கவனமாக மதிப்பீடு செய்த பிறகே, இந்த மாற்றங்களை மற்ற பள்ளிகளிலும் விரிவுபடுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என MOE தெரிவித்துள்ளது.
மாணவர்களின் கற்றல் முடிவுகள் மேம்படுகிறதா, ஆசிரியர்களுக்கு கற்பித்தலை மையமாகக் கொண்டு செயல்பட அதிக நேரம் கிடைக்கிறதா மற்றும் இந்த நடைமுறைகள் நீண்ட காலத்திற்கு நிலையானவையா என்பவை ஆய்வு செய்யப்பட உள்ளன.
மேலும், சிறிய வகுப்புகள் என்பது மாணவர்களின் எண்ணிக்கையை மட்டும் குறைப்பது அல்ல என்றும், ஒவ்வொரு மாணவரின் கற்றல் தேவையை சிறப்பாக பூர்த்தி செய்வதே முக்கிய நோக்கம் என்றும் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
