சிங்கப்பூரில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு கண்காட்சி..!! எதற்காக..??

சிங்கப்பூரில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு கண்காட்சி..!! எதற்காக..??

தேசிய சிறுநீரக அற நிறுவனமும், சித சோஷியல் எகுவிட்டி’ (The Social Equity) அமைப்பும் இணைந்து கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி ஒரு வேலை வாய்ப்பு கண்காட்சியை நடத்தியது.

இந்த கண்காட்சியில் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை மேற்கொள்ளும் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டது.

இந்த கண்காட்சியின் மூலமாக 12 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது மக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.


‘ தி சோசியல் எகுவிட்டி’ அமைப்பு நேரடி வேலைவாய்ப்பு கண்காட்சியை ஏற்பாடு செய்ததால் இணையதள வேலை வாய்ப்புகளையும் விளம்பரப்படுத்தியது.

இந்த தளங்கள் மூலம் தற்போது 50,000 க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் வெளியாகி உள்ளன.

இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியை நடத்துவதற்கு காரணம்: சிறுநீரக சுத்திகரிப்பை மேற்கொள்ளும் 5,400-க்கும் அதிகமானோரில் ஏறக்குறைய 37%பணியிலிருந்து தற்போது ஓய்வு பெற்றவர்கள் எனவும் 21% வேலை செய்து வருகின்றனர் எனவும் தேசிய சிறுநீரக அற நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் பாதி பேர் வேலை தேடினாலும் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு வேலை வய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒருங்கிணைந்த தேசிய சிறுநீரக அரை நிறுவன சமூக வேலைவாய்ப்பு கண்காட்சி மூலமாக 18 நிறுவனங்களை சேர்த்துக்கொண்டது.

இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியின் மூலமாக நோயாளியாக இருந்த 40 வயது சேர்ந்த மாலதி நாகரத்தினம் என்பவர் 9 வயதில் நீரழிவால் பாதிக்கப்பட்டு அவர் ஒவ்வொரு நாளும் இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.

பொது மருத்துவமனை ஒன்றில் சுகாதார பராமரிப்பு உதவியாளராக பணியாற்றிய இவர் 2021 ஆம் ஆண்டு பணியில் இருந்து விலகி உள்ளார்.

2022 ஆம் ஆண்டு அவரது சிறுநீரகங்கள் செயலிழந்ததை அடுத்து சிறுநீரக சுத்திகரிப்புக்கு சென்று அவருக்கு வேலை இட கண்காட்சி மூலமாக சிடல் கடையில் வேலைவாய்ப்பு கிடைத்தது.

நிறுவனங்கள் வழக்கமாக சிறுநீரக சுத்திகரிப்பை மேற்கொள்பவருக்கு ஏற்ப வேலைகளை ஏற்பாடு செய்து கொடுப்பதாக நிறுவனங்கள் தெரிவித்தது இதன் மூலமாக அனைவரையும் உள்ளடக்கிய வேலை இடத்தை உருவாக்க முடிந்ததாக நிறுவனங்களின் முதலாளிகள் தெரிவித்தனர்.

சிறுநீரக சுத்திகரிப்பு செய்வோருக்கு ஏற்றார் போல் சூழலை உருவாக்கிக் கொடுப்பதால் அவர்களும் வசதியாக உள்ளதாக நோயாளிகள் கூறுகின்றனர்.

நோயாளிகளை பணியில் அமர்த்தியதன் மூலம் அவர்களின் நம்பிக்கை மீண்டும் உருவாக்கப்படும் என்று தேசிய சிறுநீரக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அறநிறுவனமும், த சோஷியல் எகுவிட்டி அமைப்பும் இதுபோன்று இன்னும் பல வேலைவாய்ப்பு கண்காட்சிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK