மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள்சேர்க்கை..!! எங்கே..??

மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள் சேர்க்கை..!! எங்கே..??

பிரான்ஸ் : மூஷ் என்ற கிராமத்தில் உள்ள ஒரே பள்ளியில் மாணவர்களுக்கு பதிலாக, மாடுகள் மாணவர்களாக சேர்க்கப்பட்டுள்ன.

அந்த 5 மாணவர்களின் (மாடுகளின்) பெயர்கள் : ஆர்லெட் (Arlette), ஏபுண்டோன்ஸ் (Abundance), ஏம்செல் (AmSel), அமோண்டின் (Amandine) மற்றும் அபே (Abille).

அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் மாணவர்கள் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால், இப்படி ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கிறது.

கிராமத்தில் பள்ளி இருக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சமாக 100 மாணவர்கள் பள்ளியில் பயில வேண்டும். ஆனால் அந்த கிராமத்தில் 96 மாணவர்களே இருந்துள்ளனர்.

பள்ளியைத் தொடர்ந்த நடத்த விரும்பிய அந்த கிராம பொதுமக்கள், கல்வி அதிகாரிகளின் கவனத்தை ஈர்பதற்காக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் ஆர்ப்பாட்டத்துடன் நிறுத்தி விடாமல் மாடுகளை மாணவர்களாக சேர்க்கவும் முடிவெடுத்து, அதற்கு உதவி கோரி மேயரையும் நாடி உள்ளனர்.

கிராம பொதுமக்களின் உதவியின் தேவையைப் புரிந்து கொண்ட மேயரும், அதற்குஒப்புக்கொண்டு இந்த நிகழ்வுக்கு உதவியுள்ளார்.

பள்ளியைத் தொடர்ந்து நடத்த அரசு அனுமதிக் கொடுக்க வேண்டும் என்று ஊடகத்தின் மூலம் அரசாங்கத்திற்கு மேயர் வலியுறுத்தியுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK