மலேசியா கார் விபத்து: சிங்கப்பூரர் உட்பட ஆறு பேர் காயம்..!!

மலேசியா கார் விபத்து: சிங்கப்பூரர் உட்பட ஆறு பேர் காயம்..!!

மலேசியா: ஈப்போ நகரில் உள்ள கார்டன் சவுத்துக்கு அருகே உள்ள ஜாலான் டெலியன் சுவீயில் எஸ்கவேட்டர் வாகனமும் காரும் எதிரெதிரே மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து டிசம்பர் 27 காலை 11:34 மணிக்கு பேராக் தீயணைப்பு மீட்பு படையினருக்கு அவசர அழைப்பு வந்ததாக அப்பிரிவின் தற்காலிகத் துணை இயக்குனர் ஷாஸ்லின் முகமது ஹனாஃபியா தெரிவித்தார்.

அழைப்பு வந்த ஐந்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது கஸ்கவேட்டர் வாகனமும் காரும் விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நபரும் சிக்கியுள்ளார்.

காயமடைந்த ஆறு பெயர்களில் நான்கு பேர் பெரியவர்கள் மற்றும் இருவர் சிறார்கள் என திரு ஷாஸ்லீன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களில் பெண் ஒருவர் வாகனத்தின் முன் பெண் இருக்கைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார் எனவும் சிக்கிக்கொண்ட பெண்ணை மீட்பதற்கு தீயணைப்பு படையினர் நோயாளிகளை தூக்கி செல்வதற்கு பயன்படுத்தப்படும் ஸ்ட்ரச்சர்களை பயன்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மீதமுள்ள ஐந்து பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர் என்பதை ஷாஸ்லீன் தெரிவித்தார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK