சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மலேசிய நபர்..!! காரணம்..??

சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மலேசிய நபர்..!! காரணம்..??

சிங்கப்பூர்: முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 41 வயது மலேசிய நபர் நேற்று(15.02.26) சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.அவர் மீது இன்று (16.02.26) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் காவல் படை நேற்று(15.02.26) இரவு வெளியிட்ட அறிக்கையில், பிப்ரவரி 7ஆம் தேதி முதலீட்டு மோசடி குறித்த புகார் கிடைத்ததாக கூறியுள்ளது. பாதிக்கப்பட்டவர் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பங்கு முதலீடு தொடர்பான விளம்பரத்தை பார்த்து, பின்னர் ஏமாற்றுபவர்களால் வாட்ஸ்அப் குழுவில் சேர அழைக்கப்பட்டார்.

அவரிடம் ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து கணக்கு தொடங்குமாறு கூறப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்டவர் S$25,000 ஐ ஒரு வங்கிக் கணக்கு மற்றும் YouTube கணக்கிற்கு மாற்றினார். அந்த செயலியில் முதலீட்டுக்கு 8 சதவீத வருமானம் கிடைக்கும் என காட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவருக்கு மேலும் S$50,000 முதலீடு செய்தால், வருமானம் 20% ஐ எட்டும் என்று உறுதியளித்தனர். இதனை நம்பிய பாதிக்கப்பட்டவர், ஒரு முதலீட்டு நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறிய 41 வயது நபரிடம் S$50,000 தொகையை ரொக்கமாக வழங்கினார். வாக்குறுதியளிக்கப்பட்ட வருமானத்தைப் பெற முடியாதபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

சம்பவ இட விசாரணை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது மோசடி செய்த நபர் சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணைகளின் படி, அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து பணத்தை சேகரித்து, பின்னர் அதை பன்னாட்டு மோசடி கும்பலின் உறுப்பினர்கள் என நம்பப்படும் நபர்களிடம் ஒப்படைக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

சிங்கப்பூருக்குள் எல்லைத் தாண்டி வந்து, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம், தங்கம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை சேகரிப்பதில் மோசடி கும்பல்களுக்கு உதவும் மலேசிய குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி முதல், மோசடி செய்பவர்கள், மோசடி கும்பல் உறுப்பினர்கள் மற்றும் ஆட்சேர்ப்பு செய்பவர்கள் பிரம்படி தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.

மோசடி கும்பலின் உறுப்பினர்கள் குறைந்தது 6 பிரம்படிகள் முதல் அதிகபட்சம் 24 பிரம்படிகள் வரை எதிர்கொள்ள நேரிடலாம். பணம் மோசடி செய்தல், தொலைபேசி அழைப்பு அட்டைகள் வழங்குதல் அல்லது தேசிய மின்னணு அடையாளக் கணக்குகளை மோசடி நபர்களுக்கு வழங்கும் நபர்கள், அதிகாரிகளின் விருப்பப்படி 12 பிரம்படிகள் வரை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK