அதை உண்மையென நம்பி அந்தப் பெண் 8.6 கிராம் எடையுள்ள தங்கக்கட்டியை ஷென்டன் வே வட்டாரப் பகுதியில் அந்த இரு நபர்களிடம் கொடுத்துள்ளார். பின் இதுப்பற்றி சந்தேகம் எழுந்துள்ளதால் அந்த பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை செய்ததில் மோசடி செய்த 30 வயது நபர் ஒருவர் சிங்கப்பூரிலிருந்து தப்பித்து செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்..மேலும் மற்றொரு நபரான 20 வயது உடையவர் உட்லண்ட்ஸ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அந்த இரு நபர்கள் மீதும் மார்ச் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.
இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், $50,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
இது போன்ற மோசடி கும்பல்களுக்கு உதவும் விதமாக, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணங்களை சேகரிக்க மலேசியர்கள் சிலர் சிங்கப்பூருக்கு பயணம் செய்து வருவதாகவும், அவற்றை கண்காணித்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.