தெலோக் பிளாங்காவில் பயங்கர தீ விபத்து..!! 1 நபர் படுகாயம்..!!
சிங்கப்பூரில் நேற்று (மே 24) தெ லோக் பிளாங்காவில் உள்ள ஒரு HDB குடியிருப்புப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தீ காயங்களுடன் ஒரு நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தெலோக் பிளாங்கா ஹைட்ஸின் பிளாக் 56 இல் நேற்று (மே 24) இரவு சுமார் 700 மணி அளவில் இந்த தீ விபத்து குறித்த தகவல் தங்களுக்கு கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF) தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், 9-வது மாடியில் உள்ள ஒரு அறையில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்டனர். அங்கு கதவை உடைத்துக் கொண்டு வந்த அறைக்குள் நுழைந்தவர்கள் ஒரு மெத்தையில் ஏற்பட்ட தீயை தண்ணிர் குழாய் பயன்படுத்தி அணைத்தனர்.
தீ விபத்தில் சிக்கிய ஒருவர் பலத்த தீக்காயங்களுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் SCDF வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் இருந்து சுமார் 48 குடியிறுப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 21 வயது இளைஞர் சுயநினைவுடன் இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தஞ்சோங் பாகர் GRC நாடாளுமன்ற உறுப்பினர் வான் சின்யான் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களையும் நேரில் சந்தித்ததாகவும், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தண்ணீர் மற்றும் மின்சார விநியோகம் தடைபடவில்லை எனவும் நேற்று (மே 4) இரவு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் மற்றும் அது தொடர்பான உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் அவர் தெரிவித்திருந்தார்.