நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU): Al கல்வி முறையின் புதிய திட்டம்..!!

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU): Al கல்வி முறையின் புதிய திட்டம்..!!

சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU), செயற்கை நுண்ணறிவைக் (AI) கொண்ட கல்விமுறையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

2030 ஆம் ஆண்டிற்குள், பல்கலைக்கழகத்தில் உள்ள 52 இளங்கலைப் படிப்புகளில் சுமார் 40% படிப்புகளுக்கு செயற்கை நுண்ணறிவு கல்வி (AI) வழங்கப்பட உள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டு திறன்களையும், பணியிடத்தில் போட்டி தன்மையையும் கொண்ட பட்டதாரிகள் உருவாக்கப்படுவார்கள் என்று பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

மேலும் தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு கல்வியை அறிமுகப்படுத்திய, சிங்கப்பூரின் முதல் பல்கலைக்கழகமாகவும் NTU திகழ்கிறது.

இது குறித்து இன்று (ஏப்ரல் 6) பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் இளங்கலைப் படிப்புகளில் 5% படிப்புகள் மட்டுமே செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளை இப்பொழுது உள்ளடக்கியுள்ளது. ஆனால் 2030ம் ஆண்டிற்குள் இந்த சதவீதத்தை அதிகப்படுத்தும் விதமாக பல்கலைக்கழகம் திட்டமிட்டு இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்தது.

பல்கலைக்கழகத்தின் செல்வாக்கை வலுப்படுத்துவதன் நோக்கமாக NTV- வின் ” NTU 2030 ” என்ற ஐந்தாண்டு கால வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமைந்துள்ளது எனவும் கூறியது.

இந்த புதிய கல்வி முறைக்கு உதவும் வகையில், இந்த ஆண்டு (2026) ஆகஸ்ட் மாதம் முதல், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தனது இளங்கலை மாணவர்களுக்கு ஜெமினி எண்டர்பிரைசஸ், Google Al ஸ்டுடியோ மற்றும் வெர்டெக்ஸ் AI போன்ற கூகுளின் செயற்கை நுண்ணறிவு கருவிகளை இலவசமாக வழங்க உள்ளது.

மாணவர்கள் அவர்களது சொந்த AI கருவிகளை உருவாக்குவதற்காக கணினிகளையும் வழங்கவுள்ளது.

மாணவர்கள் கற்றலுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டஜன் கணக்கான செயற்கை நுண்ணறிவு முகவர்களை உருவாக்கலாம் எனவும், மேலும் பணியிடத்தில் தங்களது போட்டித் திறன்களை மேம்படுத்திக் கொள்ள, பட்டப்படிப்புக்கு பிறகும் இந்த முகவர்களை அவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி பயன்பெறலாம் எனவும் NTU தெரிவித்துள்ளது.

Al சார்ந்த கல்வி முறையின் ஒரு பகுதியாக, மாணவர்கள் செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துவது, அதன்வெ ளியீடுகளின் துல்லியம் மற்றும் நெறிமுறைகளின் தாக்கத்தை மதிப்பிடுவது மற்றும் முடிவுகளுக்கு பொறுப்பேற்பது போன்ற அனைத்தையும் பல்கலைக்கழகம் கற்றுத் தர உள்ளது. இந்த உள்ளடக்கம் கட்டாயப் பாடங்களில் சேர்க்கப்பட உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK