சிங்கப்பூரில் மாணவர்களுக்காக புதிய திட்டம்..!!!

சிங்கப்பூரில் மாணவர்களுக்காக புதிய திட்டம்..!!!

சிங்கப்பூர்: தென்மேற்கு சமூக மேம்பாட்டு கவுன்சிலும் அதன் கூட்டுக் குழுவும் இணைந்து மாவட்டத்தில் உள்ள கிட்டத்தட்ட 1,500 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு AI மூலமாக கற்றல் திறன்களை மேம்படுத்த புதிய திட்டத்தை தொடங்கியது.

இந்த புதிய முயற்சியானது சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான கைட்சென்ஸ், டெமாசெக் அறக்கட்டளை, குவாண்டெட்ஜ் அறக்கட்டளை, தென்மேற்கு சமூக கவுன்சில் போன்றவர்கள் இணைந்து உருவாக்கிய புதிய முயற்சியாகும்.

இந்த முயற்சியின் மூலம் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 1,500 பள்ளி மாணவர்களான 4 முதல் 6 வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு AI மூலம் இயங்கும் கற்றல் தளத்தினை வழங்க உள்ளது.

இந்த தொழில்நுட்ப தளத்தில் 24 மணி நேரமும் ஆன்லைனில் AI கற்றல் பயிற்சியாளர் இருப்பார்.

ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற முக்கியமான பாடங்களை உள்ளடக்கி தனி பயனாக்கப்பட்டு கற்றல் ஆதரவை மாணவர்களுக்கு வழங்க உள்ளது.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் சமூக தன்னார்வலர்கள் சமூக கிளப்புகளில் இந்த தளத்தினை பயன்படுத்துவதில் மாணவர்களுக்கு வழி காட்டவும் செய்வார்கள்.

இந்த புதிய திட்டத்தினை இன்று(13/09/2025) தென்மேற்கு சமூக மேம்பாட்டு கவுன்சிலின் கூட்டாளர் பாராட்டு நிகழ்வின் போது கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தொடங்கி வைத்தார்.

கடந்த நிதியாண்டின் போது, தென்மேற்கு சமூக கவுன்சில் 420க்கும் மேற்பட்ட வணிகங்கள் மற்றும் சமூக இணைப்பாளர்களுடன் இணைந்து 27 உதவி திட்டங்கள் போன்ற பல திட்டங்களை தொடங்கியது.

இதன் மூலம் சுமார் 60,000 குடியிருப்பாளர்கள் பயனடைந்தனர். இந்த இணைப்பாளர்கள் $3.6 மில்லியனுக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் பொருட்களையும் வழங்கியுள்ளனர்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan