தற்போது உலகில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் அதை சமாளிப்பதற்காக சிங்கப்பூர் அரசு 1 பில்லியன் டாலர் கூடுதல் உதவித்தொகுப்பை இன்று (ஏப்ரல் 7) நாடாளுமன்றத்தில் போக்குவரத்து தற்காலிக அமைச்சர் மற்றும் நிதித்துறை மூத்த துணை அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ் வெளியிட்டுள்ளார்.
இந்த சூழல் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுபவர்களுக்கு நேரடியான ஆதரவையும் அனைத்து குடும்பங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் பொதுவான ஆதரவும் வழங்கப்படும் என்று அறிக்கை வெளியிட்ட பேசியுள்ளார்.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு: 1. அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள் உடற்குறை உள்ளோர் மூத்தவர் ஆகியோருக்கு தற்காலிக உதவி வழங்கப்படும். 2. நிறுவனங்களுக்கு வருமான வரி கழிவு 40 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிக்கும். இதில் தகுதி பெரும் நிறுவனங்களுக்கு $2,000 நிதி உதவியும் $40,000 அனகோலமும் வழங்கப்படும். இந்த மாற்றங்கள் ஏப்ரல் இறுதியில் நடத்திற்க்கு வரும்.
3. இணையதள சேவை ஊழியர்களுக்கும் டாக்ஸ் ஓட்டுநர்களுக்கும் $200 நிதி வழங்கப்படும். இதை நடைமுறைக்கு ஏப்ரல் கடைசியில் வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 4. முக்கியமான அரசாங்க கட்டமைப்பு பணிகளையும் மேற்கொள்கின்ற நிறுவனங்களுக்கு கூடுதல் ஆதரவு அளிக்கப்படும் இதில் குறிப்பாக அதிகரிக்கும் எரிபொருள் செலவினுடைய ஒரு பங்கினை அரசாங்கம் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
5. எரிசக்தியை மிச்சப்படுத்துகின்ற பொருட்களை வாங்க வழங்கப்படும் மாநிலங்கள் தற்போது விரிவு படுத்தப்படுகின்றன. அனைத்து நிறுவனங்களும் இந்த மானியத்திற்காக விண்ணப்பிக்கலாம். இந்த மானிய தொகையானது 2028 மார்ச் வரை வழங்கப்படும். 6. CDC பற்றுச்சீட்டு தொகையான $500 ஜனவரி 2027 க்கு பதில் அதற்கு முன்னதாகவே இந்த ஆண்டு(2026) ஜூன் மாதம் வழங்கப்படும்.
7. $400 முதல் $600 வரை வாழ்க்கை செலவினர் சிறப்பு தொகை வருகின்ற செப்டம்பர் மாதத்தில் வழங்கப்படும். சுமார் 2.4 மில்லியன் இந்த சிறப்பு தொகை பெறுபவர்கள் ஆக தகுதி பெறுவர்.
நிதி அமைச்சகமானது சூழ்நிலையை தொடர்ந்து கவனிக்கும் என திரு சியாவ் உறுதியுடன் கூறியுள்ளார். மேலும் தேவைப்பட்டால் கூடுதல் ஆதரவு வழங்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.