ஜப்பானில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு புதிய வரம்பு..!!

ஜப்பானில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு புதிய வரம்பு..!!

டோக்கியோ: ஜப்பானில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை 2028 நிதியாண்டு முடிவுவரை 12,31,900 ஆக கட்டுப்படுத்த ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.இந்த வரம்பு, தற்போது நடைமுறையில் உள்ள Specified Skilled Worker (i) மற்றும் 2027 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் Employment for Skill Development ஆகிய இரண்டு குடியிருப்பு நிலைகளுக்கும் பொருந்தும்.

தொழிலாளர் பற்றாக்குறை கடுமையாக உள்ள முதியோர் பராமரிப்பு, கட்டுமானம் உள்ளிட்ட 19 துறைகள் இதில் அடங்கும். 2019ல் தொடங்கப்பட்ட Specified Skilled Worker (i) நிலைக்கு இருந்த 8.2 லட்சம் உச்சவரம்பு, தற்போது 8,05,700 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், Technical Intern Training Program-ஐ மாற்றி வரும் Employment for Skill Development நிலைக்கு, 17 துறைகளில் 4,26,200 பேர் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடுமையான குடியிருப்பு மேலாண்மையை வலியுறுத்தும் பிரதமர் சனயே டகாயிச்சி தலைமையிலான அரசின் கொள்கையை இந்த முடிவு பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அமைச்சரவை ஒப்புதல் 2026 ஜனவரியில் பெறப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

Employment for Skill Development நிலை, திறமையில்லாத வெளிநாட்டு தொழிலாளர்கள் மூன்று ஆண்டுகளில் வேலைக்குத் தேவையான திறனை பெறும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. Specified Skilled Worker நிலை இரண்டு பிரிவுகளை கொண்டது; Category (i) மூலம் ஐந்து ஆண்டுகள் வேலை செய்யலாம்,
Category (ii)க்கு மேம்பட்ட திறன் தேவைப்படுவதுடன்,குடும்பத்தினருடன் ஜப்பானில் நிரந்தரமாக தங்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் உற்பத்தித்திறன் உயர்ந்ததை கருத்தில் கொண்டு, கூடுதல் துறைகள் சேர்க்கப்பட்ட போதிலும் மொத்த எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

2027 ஏப்ரலில் Technical Intern Training Program ரத்து செய்யப்பட உள்ள நிலையில், வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை என்றும், 12.3 லட்சம் என்பது வெறும் உச்சவரம்பு மட்டுமே என்றும் ஜப்பான் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK