சிங்கப்பூரில் வரும் 19ஆம் தேதி முதல் புதிய திட்டம்..!!
சிங்கப்பூரில் இந்த மாதம் 19 ஆம் தேதி முதல் ஒரு புதிய உணவு பாதுகாப்பு கட்டமைப்பை செயல்படுத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சிங்கப்பூரில் சுமார் 45 ஆயிரம் உணவு வணிகங்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் தயாரிப்பின் அளவில் அடிப்படையில் வகை ஒன்று மற்றும் வகை இரண்டு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதன் நீண்டகால உணவு பாதுகாப்பு பதிவு தரவுகளின் படி, A, B அல்லது C என்ற மதிப்பின் அடிப்படையில் பிரிக்கப்படும்.
ஒரு வருடத்திற்கும் குறைவாக செயல்பட்டு வருகின்ற வணிகங்கள் புதிய மதிப்பீடுகளின் படி குறிப்பிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, நல்ல உணவு பாதுகாப்பு பதிவுகளை பராமரித்து வருகின்ற வணிகங்களை கிரேடு A என குறிப்பிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை உள்ள நல்ல பதிவுகளை பராமரித்து வருகின்ற வணிகங்களை கிரேடு B எனவும் பெரிய உணவு பாதுகாப்பு மீறல்களை செய்த வணிகங்களை கிரேடு C எனவும் குறிப்பிடப்படும்.
கிரேட் A அல்லது B வணிகம் கடுமையான உணவு பாதுகாப்பு, மீறலை செய்துள்ளதால் அது கிரேடு C ஆக மாற்றப்படும்.
வகை 1 உணவு வணிகங்களில் உள்ள உணவகங்கள், பஃபே சப்ளையர்கள் மற்றும் பெரிய அளவிலான உணவை பதப்படுத்தி தயாரித்த வருகின்ற உணவு பதப்படுத்தும் அளவுகள் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.
இதில் தோராயமாக 15,000 வணிகங்கள் உள்ளடங்கும். கிரேடு A யை அடைவதற்கு வணிகங்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து கடுமையான உணவு பாதுகாப்பு மீறல்களை கொண்டிருத்தல் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், அதிகாரிகள் அதற்கு உண்டான விரைவான வழிகளையும் வழங்குகிறார்கள். குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு நல்ல பதிவுகளைக் கொண்டு செயல்படுகின்ற வணிகங்கள், உணவு சுகாதார பணியாளர்களை நியமித்து உணவு பாதுகாப்பு மேலாண்மை முறையை செயல்படுத்தி வரும் வணிகங்கள் குறுகிய காலத்தில் A மதிப்பீட்டை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
வணிகங்கள் மூத்த உணவு சுகாதார பணியாளர்களையும் நியமனம் செய்து உணவு பாதுகாப்பு மேலாண்மை முறையை செயல்படுத்த வேண்டும் இதன் விவரங்கள் 2027-இல் அறிவிக்கப்படும்.
உணவுப் பணியகம் உணவு வணிகங்களுக்கு அவற்றினுடைய தற்போதைய உணவு பாதுகாப்பு பதிவுகளின் அடிப்படையில் புதிய முறையில் கீழ் மதிப்பீடுகள் வழங்கப்படும். பின்னர் பொதுமக்கள் வணிக உரிமத்தில் உள்ள கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாக உணவகங்கள் மற்றும் உணவகங்களின் உணவு பாதுகாப்பு மதிப்பீடுகள் பற்றிய ஆன்லைனில் சரி பார்க்கலாம்.