சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு ...!!
சிங்கப்பூரில் பார்வைத்திறன் குறைந்தவர்களுக்காக “பூக்குவிமாடம்” (Flower Dome)பகுதியைச் சுற்றிப் பார்க்கும் வகையில் கரையோரப் பூந்தோட்டத்தில் இயந்திர நாய் வழிகாட்டி இலவசமாக பயன்பாட்டிற்கு விரைவில் வரவிருக்கிறது.
பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் தங்களைச் சுற்றி உள்ள சூழ்நிலையைக் கண்டறிய உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் காதொலிப்பான் (Headphone) கருவியும் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த வகை தொழில் நுட்பமானது பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பூங்காவின் அனைத்து இடங்களுக்கும் எந்த ஒரு இடையூறும் இன்றி செல்வதற்கு உதவியாக இருக்கும்.
இது மட்டுமல்லாமல் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களும்,அவர்களின் கவனிப்பாளர்களும் அவர்களது வருகைகளை முன்கூட்டியே திட்டமிடும் வகையில் “இணைய உணர்திறன் வரைபடமும்” (Online Sensory Map)தயாரிக்கப்பட உள்ளது.
மார்ச் 22ஆம் தேதி நடைபெற்ற கரையோரப் பூந்தோட்டத்தின் “Gift of Gardens” என்ற சமூக நலத்திட்டப் பாராட்டு விழாவில் இது குறித்து தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: இந்த கண்டுபிடிப்புகளால் பார்வையாளர்கள் பொது இடங்களை நம்பிக்கையுடனும், சுதந்திரமாகவும் சுற்றிப் பார்க்க முடியும் என்று கூறியுள்ளார்.