7000 -க்கும் மேற்பட்ட வேலைகள் குறைக்க திட்டம்..!! Standard Chartered நிறுவனம் அறிவிப்பு ..!!
சிங்கப்பூர் : Standard Chartered குழுமம் 2030 ஆம் ஆண்டுக்குள் 7000-க்கும் மேற்பட்ட வேலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக இன்று (மே 19)ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இருப்பினும் Standard Chartered சிங்கப்பூர், சிங்கப்பூர் மற்றும் ஆசியான் பிராந்தியங்களில் வாடிக்கையாளர் உறவு மேலாளர்களைத் தொடர்ந்து பணியமர்த்தும் என்றும் கூறியிருக்கிறது.
சில உலகளாவிய நிதி இலக்குகளை நாங்கள் நிர்ணயித்து உள்ளதாகவும், அதில் 2030 ஆம் ஆண்டுக்குள் உறுதியான பங்கு மீதான வருவாயை 18% ஆக உயர்த்துவதும் அடங்கும் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
சிங்கப்பூர் மற்றும் ஆசியான் பிராந்தியங்களில் எங்களின் உலகளாவிய வளர்ச்சி தொலைநோக்கு பார்வைக்கு இணங்க வளர்ச்சியை ஆதரிக்க நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்வோம், நாங்கள் தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்கள் பணியமர்த்துவோம், தயாரிப்பு புத்தாகத்தை விரிவுப்படுத்துவோம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவோம், மேலும் புதிய வாடிக்கையாளர் மையங்களைத் தரம் உயர்த்தி தொடங்குவோம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Standard Chartered சிங்கப்பூர் 2020 முதல் சிங்கப்பூரில் உள்ள Elevate@SC பயிற்சி திட்டத்தில் $4.5 மில்லியனுககும் அதிகமாக முதலீடு செய்துள்ளது.
அந்த முதலீட்டில் இன்று வரை 8000க்கும் மேற்பட்ட உள்ளூர் தொழிலாளர்கள் பயிற்சி பெற்ற வருகின்றனர். மேலும் செயற்கை நுண்ணறிவு எழுத்தறிவு முன்முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக சிங்கப்பூர் வங்கி மற்றும் நிதி நிறுவனத்துடன் (IBF) வங்கி ஒத்துழைத்து வருகிறது.
செலவுக் குறைப்பினால் அல்ல, செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகள் மற்றும் பணியாளர் மறு பயிற்சி ஆகியவற்றால் வேலை இழப்புகள் ஏற்பட்டதாக Standard Chartered முன்பு கூறியிருந்தது என்பதை குறிப்பிடத்தக்கது.