நேரடியாக விமானம் குடியிருப்பில் விழுந்திருந்தாலும் கட்டிடத்தில் இருந்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
விமானம் கட்டுப்பாட்டை இழந்து கட்டடத்திற்கு அருகில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் நொறுங்கி விழுந்துள்ளது. இந்த காட்சியை உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் ஆனது கட்டிடத்தின் மாடிப்படியில் மோதியதால் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. மீட்பு படையினர் குடியிருப்பாளர்களை கட்டிடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.
பிரேசிலில் கடந்த ஆண்டு (2025) மட்டும் சுமார் 153 விமான விபத்துகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆகும்.