மக்களே..!! இன்று வானில் தோன்றும் இந்த அரிய காட்சியை மிஸ் பண்ணாதீங்க..!!!

மக்களே..!! இன்று வானில் தோன்றும் இந்த அரிய காட்சியை மிஸ் பண்ணாதீங்க..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் வானியல் ஆர்வலர்கள் இம்மாதம் ஜெமினிட் மற்றும் உர்சிட் என இரண்டு விண்கல் மழைகளை வெறும் கண்ணால் காண முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

வானில் நேற்று(13.12.25) தோன்றிய ஜெமினிட் விண்கல் மழை இன்று(14.12.15) உச்சத்தை எட்டுகிறது.இந்த விண்கல் மழை ஆண்டின் சிறந்த மற்றும் நிலையான மழைகளில் ஒன்றாகக் கருதப்படுவதுடன்,நள்ளிரவில் தெளிவாக பார்க்க முடியும்.வானில் ஒரு மணி நேரத்திற்கு 120 வரை விண்கற்கள் தோன்றக்கூடும்.

இதற்குப் பிறகு, குறைந்த தீவிரம் கொண்ட உர்சிட் விண்கல் மழை டிசம்பர் 21 மற்றும் 22 இரவுகளில் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடியற்காலைக்கு முந்தைய அதிகாலை நேரம் இதைப் பார்ப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.ஒரு மணி நேரத்திற்கு ஐந்து முதல் பத்து விண்கற்கள் வரை காண வாய்ப்பு உள்ளது.

சிங்கப்பூர் அறிவியல் மைய கோளரங்கத்தின் தகவலின்படி, விண்கற்களைப் பார்க்க எந்த சிறப்பு உபகரணங்களும் தேவையில்லை. நகர்ப்புற ஒளி மாசுபாட்டிலிருந்து விலகிய பூங்காக்கள், கடற்கரைகள் அல்லது திறந்த வெளிகள் சிறந்த பார்வை இடங்களாக இருக்கும்.

மழைக்காலம் என்பதால் மேக கூட்டங்களால் தெளிவாகப் பார்க்க இயலாமல் போகலாம். எனவே பார்வையாளர்கள் முன்கூட்டியே வானிலை நிலையை சரிபார்ப்பது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.