குடியிருப்பாளர்கள் நிம்மதி..!!புத்துயிர் பெற்ற தஞ்சோங் பகார்..!!

குடியிருப்பாளர்கள் நிம்மதி..!!புத்துயிர் பெற்ற தஞ்சோங் பகார்..!!

சிங்கப்பூர்: தஞ்சோங் பகார் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு,அப்பகுதி தற்போது மிகவும் நேர்மறையான மற்றும் ஆரோக்கியமான சூழலை நோக்கி நகர்ந்து வருவதாக அப்பகுதி குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ சீ சியாங் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில், தஞ்சோங் பகார் பகுதியில் இயங்கி வந்த சுமார் 10 மசாஜ் மூடப்பட்டதாக அவர் சனிக்கிழமை (03.01.26) தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், தஞ்சோங் பகார் பகுதியை மீண்டும் உயிர்ப்பிக்கும் திட்டத்தை குடியிருப்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும், அதற்கு அப்பகுதி மக்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்ததாகவும் ஃபூ சீ சியாங் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,காவல்துறையினர் அப்பகுதியில் வழக்கமான சோதனைகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனைகளின் போது, எட்டு மசாஜ் பார்லர்கள் அல்லது ஸ்பாக்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். மேலும், சட்ட அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

மூடப்பட்ட கடைகளில் குறைந்தது பாதி கடைகள் காவல்துறையினரின் நேரடி சோதனைக்குப் பிறகே மூடப்பட்டதாக வணிகர்கள் மற்றும் பிற கடை உரிமையாளர்கள் தெரிவித்ததாகவும் ஃபூ சீ சியாங் கூறினார். காலியாக உள்ள கடைகளில் ஒன்றை புதிதாக தொடங்கப்பட்ட இசைப் பள்ளி ஏற்கனவே கையகப்படுத்தியுள்ளதுடன், மீதமுள்ள கடைகள் இன்னும் வாடகைக்கு விடப்படுவதற்காகக் காத்திருக்கின்றன.

இதனிடையே, தஞ்சோங் பகார் பிளேஸ் வணிகர்கள் சங்கம், பன்முகப்படுத்தப்பட்ட புதிய கடைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதிகமான மக்களை ஈர்க்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. சட்டப்பூர்வமாக இயங்கும் மசாஜ் மையங்கள் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவ பிரிவுகளும், தரமற்ற கடைகள் நீக்கப்படுவது பிளாசாவின் மொத்த பிம்பத்தை மேம்படுத்த உதவும் என்று ஃபூ சீ சியாங் கூறினார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK