சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி அதிகரிப்பு..!! விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி அதிகரிப்பு..!! விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் மே மாதம் 20 ஆம் தேதியிலிருந்து ‘பேஸ்புக் லைவ்’ நேரலை மூலமாக சில மோசடி நிகழ்வுகள் நடந்துள்ளது.

இது குறித்த அறிக்கையாக காவல் தறையினர் ஜூன் 15ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
‘ஸ்க்ராட்ச் கார்ட்ஸ்’ எனப்படும் அதிர்ஷ்ட பரிசு அட்டைகள், லாட்டரி சீட்டுகள் போன்றவற்றின் மூலமாக வெற்றி பெற வாய்ப்புள்ளது என மோசடியில் ஈடுபடுபவர்கள் ஆசை வார்த்தைகள் கூறி தற்போது ஏமாற்று வேலை நடந்து வருகிறது.

இதில் வெல்பவர்களுக்கு வெல்லும் தொகையை பெற்றுக் கொள்வதற்கான செயல்பாடு கட்டணத்தை ஏமாறியவர்கள் செலுத்துமாறு மோசடிக்காரர்கள் கேட்பார். இதுபோன்று தொகையை வாங்கி பொதுமக்களை ஏமாற்றுகின்றனர்.

குறிப்பிட்ட தொகையை மோசடிக்காரர்கள் வாங்கியவுடன் தங்கள் வென்றதாக நம்பிய தொகை அனுப்பப்பட மாட்டாது. அவ்வப்போது மோசடிக்காரர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தாலும் தொடர்பு கொள்ள முடியாது.

அதன் பிறகே ஏமாந்தவர்கள் பணத்தை கொடுத்து இழந்துவிட்டதாக உணர்வர். எனவே இது குறித்து விழப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் யாரும் தெரியாதவர்களிடம் பணத்தையும் மற்ற விலை மதிப்பு மிக்க பொருட்களையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம் எனவும் தங்கள் ஆலோசனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மோசடி ஆட்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் ஸ்கேம்சீல்டு செயலியை பதிவிறக்கம் செய்து கொண்ட அதில் குறிப்பிட்டுள்ள ஆலோசனைப்படி நடக்க வேண்டும் என காவல்துறை சுட்டிக்காட்டி உள்ளது.

மோசடி சம்பவங்கள் குறித்து குறைந்த பட்சம் 33 புகார்கள் வந்துள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. மேலும் அதிர்ஷ்ட குலுக்கல் கிடைத்துள்ளதாக மக்களிடம் கூறி மோசடி செயல்களில் ஈடுபட்டு குறைந்தபட்சம் $60,000 தொகையை இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK