CTE இல் சாலை விபத்து!! இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!!

சிங்கப்பூரில் CTE இல் வாகனங்கள் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் இரண்டு பேர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் Chin Swee Road சாலை வெளியேறும் இடத்திற்கு முன்பு SLE நோக்கி செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து ஜூன் 9 ஆம் தேதி (இன்று) காலை 9 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இந்த விபத்தில் ஒரு கார்,டிரக் மற்றும் லாரி மோதிக் கொண்டதாக காவல்துறை கூறியது.
41 வயது ஆண் கார் ஓட்டுநர் ஒருவரும், 36 வயது பெண் கார் பயணி ஒருவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படை கூறினர்.
மேலும் ஒரு நபருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
26 வயதுடைய லாரி ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாக காவல்துறை கூறியது.விசாரணை தொடர்கிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
