மேலும், கோவிட்-19 காலத்தில் அறிமுகமான நெகிழ்வான வேலை ஏற்பாடுகள் இன்னமும் தொடர்வதால், பல பெற்றோர் தாங்களே பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் நிலை அதிகரித்துள்ளது.
இதற்கு மேலாக ஓட்டுநர் பற்றாக்குறை, எண்ணெய் விலை உயர்வு,வாகன உரிமைச் சான்றிதழ்(COE)கட்டண உயர்வு போன்ற சவால்களும் பள்ளிப் பேருந்துத் துறையை அழுத்தி வருகின்றன.
மேலும் பள்ளிகளுக்கு அருகிலேயே குடியிருப்புகள்,பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் கொள்கைகள்,பள்ளி தொடக்க நேரங்களில் மாற்றம் போன்ற காரணங்களாலும் பள்ளி பேருந்து தேவை குறைகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு பள்ளிப் பேருந்துக் கட்டணம் சுமார் 15 விழுக்காடு வரை உயரக்கூடும் என சிங்கப்பூர் பள்ளிப் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.