அதிர்ச்சி..!! கடலில் மிதந்த சிறுவன்..!! என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..

அதிர்ச்சி..!! கடலில் மிதந்த சிறுவன்..!! என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை (29.08.25) காணாமல் போன 11 வயது சிறுவன் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை இரவு கிழக்கு கடற்கரை பூங்காவிற்கு அருகில் கடலில் சிறுவனின் உடல் மிதந்தது.

போலீசார் தெரிவித்ததாவது, சனிக்கிழமை (30.08.95) இரவு சுமார் 9:55 மணியளவில், கிழக்கு கடற்கரை பூங்காவில் ஒருவர் உதவி தேவைப்படுவதாக தகவல் வந்ததாக கூறினர்.

சிவில் பாதுகாப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டனர். ஆனால், துணை மருத்துவர்கள் சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) அதிகாரிகளால் சிறுவனின் உடல் கரைக்குக் கொண்டுவரப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை சிறுவன் முஹம்மது ஹைரில் எஃபெண்டி என அவனது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டதாக போலீசார் உறுதிப்படுத்தினர்.

ஹைரிலின் தந்தை திரு. ஃபெண்டி, தனது மகனுக்கு ஆட்டிசம் இருப்பதாகக் கூறினார்.

இந்நிலையில், இறந்தவரின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தும் வகையில், சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பகிர வேண்டாம் என்று பொதுமக்களிடம் போலீசார் கேட்டுக்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் குற்றச்சாட்டு அல்லது கொலை சம்பந்தம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan