சிங்கப்பூர் சினிமா சந்தையில் அதிர்ச்சி..!!

சிங்கப்பூர் சினிமா சந்தையில் அதிர்ச்சி..!!

சிங்கப்பூர்: கேத்தே சினிப்ளெக்ஸ் உரிமையாளர் mm2 ஆசியா, 2025 நிதியாண்டில் S$122.4 மில்லியன் நிகர இழப்பை சந்தித்துள்ளதாக வியாழக்கிழமை (28.08.25) வெளியிட்ட நிதி அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இருந்த S$1.9 மில்லியன் இழப்பிலிருந்து இது மிகப் பெரிய உயர்வாகும்.

2025 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், குழுமத்தின் மொத்த வருவாய் S$165.1 மில்லியனாக குறைந்துள்ளது. இது 2024 இல் இருந்த S$191.8 மில்லியனுடன் ஒப்பிடும்போது 13.9 சதவீதம் சரிவாகும்.

எனினும், கடந்த ஆறு மாதங்களில் (அக்டோபர்–மார்ச்) வருவாய் S$79.7 மில்லியனாக உயர்ந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்த S$65.9 மில்லியனைக் காட்டிலும் 21 சதவீதம் அதிகம். ஆனால் அதே நேரத்தில், நிகர இழப்பு S$118.4 மில்லியனாக பத்துமடங்கு அதிகரித்தது.

நிறுவனத் தலைவர் மெல்வின் ஆங், “சினிமா வணிகத்தில் சட்ட, நிதி சிக்கல்கள் மிகுந்த சவாலாக மாறியுள்ளன.மீட்சிக்கான பாதை யாரும் எதிர்பார்த்ததை விட நீண்டதாக இருக்கிறது” என தெரிவித்தார். கடன் வழங்குநர்களுடன் தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

COVID-19 பாதிப்பு, OTT தளங்களின் போட்டி, அதிகரித்த செயல்பாட்டு செலவுகள் போன்ற காரணங்களால் சினிமா துறையின் மீட்பு கடினமாக உள்ளது. இதனால் மறுசீரமைப்பு, இணைப்பு அல்லது விற்பனை உள்ளிட்ட விருப்பங்களை நிறுவனம் ஆராய்கிறது.

இசை நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி நிகழ்வுகளில் “எச்சரிக்கையான நம்பிக்கை” இருப்பதாகவும், டிஜிட்டல் ஊடகம் மற்றும் ஸ்ட்ரீமிங் உள்ளடக்கத்தில் தொடர்ந்து முதலீடுகள் நடைபெறுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

சிங்கப்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளில் Cathay Cineplexes ஆறு திரையரங்குகள் மூடப்பட்டு, தற்போது நான்கு மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. அதேபோல் WE Cinemas, Filmgarde, சமீபத்தில் The Projector போன்றவை சந்தையில் இருந்து விலகியுள்ளன.

திரு. ஆங், “எங்கள் உத்தி முக்கிய வணிக வளர்ச்சி, புதிய உள்ளடக்க முயற்சிகள் மற்றும் முக்கியமற்ற பிரிவுகளை விற்பனை செய்வதில் கவனம் செலுத்தும். இதன் மூலம் நிறுவனத்தை மீண்டும் வலுவாக நிறுத்துவோம்” என உறுதியளித்தார்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan