பொங்கோலில் நடந்த அதிர்ச்சி விபத்து…!! ஓட்டுநரை விசாரிக்கும் காவல்துறை..!!

பொங்கோலில் நடந்த அதிர்ச்சி விபத்து...!! ஓட்டுநரை விசாரிக்கும் காவல்துறை..!!

சிங்கப்பூர்:சந்திர புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 17ஆம் தேதி அதிகாலை, ஒரு மெர்சிடஸ் கார் நடுத்தர தடுப்புச் சுவர் மீது மோதியது. இதனால் தடுப்புச் சுவரின் பல பகுதிகள் இடிந்து சிதறிக் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக நேற்று(18.02.26) சமூக வலைதளத்தில் வெளியான காணொளியில், பொங்கோல் வடக்கு அவென்யூ சாலையின் ஓரத்தில் வெள்ளி நிற கார் ஒன்று அபாய விளக்குகள் ஒளிர்ந்தபடி நிறுத்தப்பட்டிருந்தது. சாலையில் சிதறியிருந்த பச்சை நிற பாதுகாப்புத் தடுப்பு துண்டுகளை ஒருவர் அகற்றிக் கொண்டிருந்தார். காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்திருந்தது.பதிவு இலக்கத் தகடும் காணப்படவில்லை.

இதை கண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, சாலையில் கிடந்த குப்பைகளை சுத்தம் செய்ய உதவினார். அவரது செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்ததாவது, அதிகாலை 4 மணியளவில் பொங்கோல் வடக்கு சாலை மற்றும் பொங்கோல் வழி சந்திப்பில் போக்குவரத்து விபத்து குறித்த தகவல் கிடைத்தது. ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

போலீசார் கூறுகையில், பொங்கோல் வடக்கு சாலையில் பொங்கோல் கிழக்கு நோக்கிச் சென்றபோது கார் சறுக்கி தடுப்புச் சுவரில் மோதியதாகத் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய 51 வயதான ஆண் ஓட்டுநர் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.