ஷாப்பிங் மாலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!PWD மோதி மூதாட்டி படுகாயம்..!!

ஷாப்பிங் மாலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!PWD மோதி மூதாட்டி படுகாயம்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பாசிர் ரிஸ் ஷாப்பிங் மாலில் நடந்த ஒரு விபத்து, பகிரப்பட்ட நடைபாதைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.

71 வயதான மலர் சிங்கம் என்ற மூதாட்டி, படிக்கட்டுகளில் இருந்து இறங்கி வந்தபோது, பின்னால் இருந்து வந்த தனிநபர் நடமாட்ட சாதனம் மோதியதால் அப்படியே சாலையில் குப்புற விழுந்தார்.

இந்த விபத்தில் அவரது தாடையில் மூன்று எலும்பு முறிவுகள் ஏற்பட்டதுடன், அறுவை சிகிச்சை செய்து இம்பிளாண்ட் பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது அவர் பேச முடியாத நிலையில், ஸ்ட்ரா மூலம் திரவ உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டு, அன்றாட தேவைகளுக்கும் உதவி தேவைப்படும் சூழலில் உள்ளார்.
முன்பு சுறுசுறுப்பாக இருந்த அவரது வாழ்க்கை, தொற்று அபாயம் காரணமாக வீட்டுக்குள் முடங்கியுள்ளது.

இந்த விபத்தால், தம்பதியினர் தங்கள் 50வது திருமண ஆண்டு விழாவுக்காக திட்டமிட்டிருந்த அமெரிக்கா பயணமும் கைவிடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அவரது கணவர் பிராங்க் சிங்கம் சமூக ஊடகங்களில் பகிர்ந்து, PMD வேகம் மற்றும் நடைபாதை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றுள்ளார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்புடன் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK