அமெரிக்கா செல்லும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் ..!!

அமெரிக்கா செல்லும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் ..!!

சிங்கப்பூர் : துணைப் பிரதமரும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சருமான கான்கிம் யோங், இன்று (ஏப்ரல் 12) அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் பொருளாதாரக் கூட்டாண்மையை இந்தப் பயணம் வலுப்படுத்தும் என்று சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கான் கிம் யோங் முதலில் வரும் 13ஆம் தேதி அன்று டெக்சாஸின் ஆஸ்டின் நகருக்குச் சென்று அங்குள்ள மாநில தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.

அங்கு சிங்கப்பூர் மற்றும் டெக்ஸாஸ் வணிகங்களுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய உள்ளார்.

அதன் பிறகு தனியார் துறைப் பிரதிநிதிகளைச் சந்தித்து என எண்டர்பிரைஸ் சிங்கப்பூரில் புதிதாக நிறுவப்பட்ட ஆஸ்டின் வெளிநாட்டு மையத்தின் தொடக்க விழாவைத் தொடங்கி வைக்க உள்ளார்.

அவர் செமாஃபார் உலகப் பொருளாதார மாநாட்டில் நடைபெறும் கலந்துரையாடலிலும் பங்கேற்க உள்ளார்.

சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவராகவும் உள்ள துணை பிரதமர் கான், சர்வதேச நாணய நிதியத்தின் சர்வதேச நாணய மற்றும் நிதிக்குழுவின் முழுமை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். மேலும் அந்த அமைப்பு மற்றும் உலக வங்கியின் வசந்தகாலக் கூட்டங்களின் இடையே நிதித் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.

துணைப் பிரதமருடன் இந்த பயணத்தில் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இந்த அமெரிக்க பயணத்தை துணைப்பிரதமர் இன்று (ஏப்ரல் 12) முதல் அடுத்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) வரை மேற்கொள்வார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK