வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிங்கப்பூர் அரசு தரும் ஆதரவு..!!!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிங்கப்பூர் அரசு தரும் ஆதரவு..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சுமார் 900 தங்குமிடங்களில் விரிவான மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கி 2030 வரை நீடிக்கும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது, கோவிட் காலத்திற்குப் பிறகு வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்விட தரத்தை மேம்படுத்தி, எதிர்கால அவசரநிலைகளுக்கு தயார் நிலையில் வைக்கும் சிங்கப்பூரின் முயற்சிகளில் ஒரு பகுதியாகும்.

மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஊழியருக்கும் கூடுதல் இட வசதி வழங்கப்படும். ஒவ்வொரு அறையிலும் தனிப்பட்ட கழிப்பறைகள், தங்குமிட வரம்புகள் மற்றும் புதிய தரநிலைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. கட்டாயத் தரநிலைகள் நடைமுறைக்கு வரும் முன்பே 14 தங்குமிடங்களில் பணிகள் தொடங்கியுள்ளன.

புதிய வசதிகளை அமைக்கும் செலவினைச் சமாளிக்க மனிதவள அமைச்சகம் நிதி ஆதரவு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சில தங்குமிடங்களில் புதிய தொழில்நுட்பங்களும் சோதிக்கப்படவுள்ளன.

தங்குமிட வசதிகளைத் தாண்டி, ஊழியர்களின் ஒட்டுமொத்த நலனிலும் கவனம் செலுத்தப்படுகிறது. சுகாதார சேவைகள் மற்றும் மனநல ஆதரவுக்காக 24 மணி நேர தொலைபேசி சேவையும் வழங்கப்படும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK