சிங்கப்பூர் HDB சம்பவம்..!! பணிப்பெண்ணுக்கு உண்மையில் என்ன நடந்தது..???

சிங்கப்பூர் HDB சம்பவம்..!! பணிப்பெண்ணுக்கு உண்மையில் என்ன நடந்தது..???

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 24 வயது பணிப்பெண் ஒருவர் HDB ஜன்னலுக்கு வெளியே நின்று கொண்டிருந்ததைக் கண்ட சிவில் பாதுகாப்புப் படையினர் அந்தப் பெண்ணை மீட்டனர். மனிதவள அமைச்சகம் பணிப்பெண்ணைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவருக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 30 ஆம் தேதி காலை 10:50 மணிக்கு கிளெமென்டி தெரு 13, பிளாக் 118 இன் எட்டாவது மாடியில் நடந்த சம்பவத்தில், பணிப்பெண் ஜன்னலில் துணிகள் உலர்த்தும் ரேக்கில் நின்றிருந்தார். பேரிடர் மீட்புக் குழு அவரை பாதுகாப்பாக மாடியில் இருந்து இறக்கி மீட்டது.

மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

அவருக்கு மன அழுத்தம் அல்லது மனநலச் சிக்கல் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இதனால் அவர் விசாரணைக்காக மனநலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.

மனிதவள அமைச்சகம் உடனடியாக தொடர்பு கொண்டு முழுஆதரவும் உதவியும் வழங்கி வருகிறது.

மனிதவள அமைச்சகம் வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் உள்ளூர் சூழலுக்கு எவ்வாறு ஒழுங்குபடுத்திக்கொள்ளலாம்.முதலாளிகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம், மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கலாம் மற்றும் தேவையான உதவியை எவ்வாறு பெறலாம் என்பதில் “செட்டில்-இன்-ப்ரோகிராம்” போன்ற பயிற்சி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

உதவி தேவைப்படும் பணிப்பெண்கள், மனிதவள அமைச்சகத்தின் உதவி எண்ணை 1800 339 5505 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது வெளிநாட்டு வீட்டு வேலைக்காரர்கள் மையம் போன்ற அரசு சாரா நிறுவனங்களை 1800 2255 233 என்ற எண்ணில் அழைத்து தங்கள் சொந்த மொழியில் உதவி பெறலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.