சிங்கப்பூர் சாலை விபத்து..!!
கார் மோதிய வீடியோ வைரல்...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (22.08.25) இரவு உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லும் புக்கிட் திமா விரைவுச்சாலையில் (BKE) ஒரு போக்குவரத்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 48 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
சிங்கப்பூர் சாலை விபத்து வலைத்தளத்தால் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், மற்ற வாகனங்களுடன் மோதியதாக சந்தேகிக்கப்படும் ஒரு கருப்பு கார் காட்டப்பட்டது.இதனால் சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக தடைபட்டது.
இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 8:05 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
புக்கிட் திமா விரைவுச்சாலையில் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லும் ஒரு போக்குவரத்து விபத்து நிகழ்ந்ததாகவும்,அதில் இரண்டு கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.