சிங்கப்பூரில் 2028ல் வரவுள்ள மிகப் பெரிய தளவாட மையம்..!!

சிங்கப்பூரில் 2028ல் வரவுள்ள மிகப் பெரிய தளவாட மையம்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் புதிய தானியங்கி தளவாட மையம் உருவாக $260 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கேப்பிட்டலேண்ட் முதலீட்டு நிறுவனம் (CapitaLand Investment, CLI) ‘ஒமேகா 1 சிங்கப்பூர்’ எனும் திட்டத்தின் கீழ் இந்த ஐந்து தள மையத்தை கட்ட திட்டமிட்டுள்ளது.

அந்த நிறுவனத்திற்கு ஜுரோங் தொழிற்பேட்டையின் 5.1 ஹெக்டர் நிலம் கைப்பற்றப்பட்டு, மையத்தின் தரைத்தளம் 71,000 சதுர மீட்டர் பரப்பளவுள்ளது. 2028ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முழுமையாக தானியக்க முறையில் இயங்கும் இந்த மையம், 60,000 அடுக்குப் பலகைகளில் சரக்குகளை தானாகச் சேமிக்கவும், தேவையான போது மீண்டும் எடுக்கவும் இயலும். இதன் மூலம் சரக்கு மேலாண்மை செயல்முறைகள் துல்லியமாகவும் வேகமாகவும் நடைபெறும்.

CLI நிறுவனம் இந்தத் திட்டம் மூலம் சிங்கப்பூரில் லாஜிஸ்டிக்ஸ் துறையின் திறன், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தளவாட துறையின் தானியக்க தொழில்நுட்பங்களை மேலும் வளர்க்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக கூறியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK