சிங்கப்பூரில் அறிமுகம் காணும் ‘ஸ்மார்ட் டயப்பர்’ திட்டம் ..!!!

சிங்கப்பூரில் அறிமுகம் காணும் 'ஸ்மார்ட் டயப்பர்' திட்டம் ..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் ஒரு புதிய திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.

இது குறிப்பாக நீண்ட நேரம் படுக்கையிலே அவதிப்படுவோர், தங்களது தேவைகளை வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலைமையிலுள்ளவர்களின் சிரமத்தை எதிர்கொள்ள உதவுகிறது.

இவர்கள் அடிக்கடி டயப்பர்கள் மாற்றப்படவில்லை என்றால், சரும நோய்களான டெர்மடைட்டிஸ் (dermatitis) போன்ற பிரச்சனைகள் உருவாகும் அபாயத்தில் இருக்கின்றனர். இதைத் தடுக்கும் வகையில், கு டெக் புவாட் மருத்துவமனையில், அக்குபேஷனல் சென்ஸிங் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை இணைத்துள்ள ‘ஸ்மார்ட் டயப்பர்’ திட்டம் இந்த மாதம் தொடங்கப்பட உள்ளது.

இந்த புதிய அமைப்பில், நோயாளியின் சிறுநீர் மற்றும் மலம் தொடர்பான தகவல்களை உணர வைக்கும் சென்சார்கள் மற்றும் AI தொழில்நுட்பம் இணைந்து செயல்படும். இது நேரடி கண்காணிப்பு வாயிலாக நர்சிங் குழுவிற்கு மையக் கட்டுப்பாட்டு அமைப்பில் தகவல்களை அனுப்பும். குறிப்பாக, தங்களது தேவைகளை தெரிவிக்க முடியாத நோயாளிகளுக்காக இது மிக முக்கியமான தீர்வாக அமைகிறது.

மருத்துவமனையின் ‘ஸ்மார்ட் வார்டு’ திட்டத் தலைவரான டாக்டர் சியெ லெச்சின் தெரிவித்ததாவது:
“இந்த தொழில்நுட்பம், மருத்துவ சேவையின் முக்கிய கட்டங்களை கவனத்தில் கொண்டு, தடுக்கக்கூடிய நிவாரண பிணிகள் (incontinence-related dermatitis) உருவாவதை தடுக்கிறது. நோயாளிகளின் மரியாதையை பாதுகாப்பதுடன், நர்சிங் வளங்களை சிறப்பாக பயன்படுத்தும் வாய்ப்பையும் வழங்குகிறது” என்றார்.

ஸ்மார்ட் டயப்பர் அமைப்பின் பலன்கள்:

✨️ நேரடி நினைவூட்டலின் மூலம் செவிலியர்கள் டயப்பரை மாற்றக்கூடிய நேரத்தைக் கண்டறிய முடிகிறது.

✨️ சருமக் கோளாறுகளான எக்சிமா போன்றவற்றைத் தவிர்க்க முடிகிறது.

✨️ வெளிப்புற சென்சார்கள் மூலம் கைமுறை பரிசோதனைகள் குறைக்கப்படுவதால், நோயாளியின் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது.

✨️ செவிலியர்களின் வேலைப்பளு குறைவதோடு, சேவையின் தரம் மேம்படுகிறது.

இத்திட்டம், பொது மருத்துவ பிரிவும், கடுமையான பக்கவாதப் பிரிவும் ஆகிய இரண்டு வார்டுகளிலே இரண்டு மாதங்கள் பரிசோதனையாக செயல்படுத்தப்படும். முக்கியமான முன்னேற்றங்கள் காணப்பட்டால், இந்தத் திட்டம் மருத்துவமனை முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

இந்த முயற்சி, ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ள ஸ்மார்ட் வார்டு திட்டங்களில் ஒன்றாகும். இதில், விழுந்துவிடுதல் தடுப்பு அமைப்புகள், தானியங்கி வாகனங்கள், ஸ்மார்ட் வியராப் சாதனங்கள், தானாக திரும்பும் படுக்கைகள் போன்ற புதிய வசதிகளும் அறிமுகமாக உள்ளன.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan