சிங்கப்பூரில் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்..!! சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்..!! சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் சோவா சூ காங் பகுதியில் சிங்கப்பூர் சுங்கத்துறையினர் நடத்திய அமலாக்க நடவடிக்கையில், 3500 அட்டை பெட்டிகளில் கடத்தப்பட்ட சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சிகரெட் களின் மதிப்பு S$4,53,965 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதில் சம்பந்தப்பட்ட 6 பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இன்று காலை (மே 13) இது குறித்து சிங்கப்பூர் சிங்கத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் மார்ச் 30ஆம் தேதியன்று நடத்தப்பட்ட நடவடிக்கையில் கடத்தப்பட்ட சிகரெட்டுகளுடன் உள்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு வேன் மற்றும் ஐஸ், கஞ்சா அடங்கிய சுமார் 17 கிராம் போதைப்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சுங்கத்துறையினருக்கு கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் சோவா சூ காங் அவென்யூ 1-ல் உள்ள பல அடுக்கு வாகன நிறுத்தும் இடத்தில் உள்ள ஒரு பொது சேமிப்பு அறையை ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது நாய் உணவு என்று பெயரிடப்பட்ட பொட்டலங்களுக்கு உள்ளேயும் இடையேயும் வைக்கப்பட்டிருந்த 2700 அட்டை பெட்டிகளில் கடத்தப்பட்ட சிகரெட்டுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நிர் ஆண்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சோதனை செய்ததை அந்த நபர்களில் ஒருவரிடம் இருந்த கார் சாவி அறைகள் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு காருக்கு வழிகாட்டி உள்ளது. அந்த வாகனத்தில் 800 அட்டை பெட்டைகளில் இருந்த கடத்தல் சிகரெட்டுகரளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் சிகரெட்டுகள் தொடர்பான வரி ஏய்ப்பு நடவடிக்கைகள் ஈடுபட்டதாக சந்தேகப்படும் 6-வது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அந்த 6 நபர்களும் விசாரணையில் உள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான மேற்பட்ட விசாரணைக்காக இந்த வழக்கை மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுவிடம் சுங்கத்துறை ஒப்படைத்து உள்ளது.

கடத்தல் அல்லது வரி ஏய்யப்பு தொடர்பான தகவல்கள் தங்களுக்கு தெரிந்தால் கீழ்க்கண்ட முகவரியில் சுங்கத்துறைக்கு தெரிவிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். https://go.gov.sg/reportcustomoffence

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK