SPH Media விவகாரம்: சட்ட நடவடிக்கை தேவையில்லை..!! காவல்துறை முடிவு..!!
சிங்கப்பூர் : SPH மீடியா விற்பனைப் புள்ளி விவரங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கூறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையைக் காவல்துறை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்காக எந்த முகாந்திரமும் இல்லை என்று முடிவுக்கு வந்ததால், இது குறித்து மேற்கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என காவல்துறை கூறியுள்ளது.
SPH மீடியா நிறுவனத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய இயக்குநர்களிடமும், ஊழியர்களிடமும் விசாரணை நடத்தியதாக காவல்துறை நேற்று (ஏப்ரல் 29) அறிக்கை வெளியிட்டிருந்தது.
காவல்துறையின் அந்த விசாரணையில் பொய் கணக்கு மற்றும் ஏமாற்று உள்ளிட்ட குற்றங்கள் ஆராயப்பட்டுள்ளன.
விசாரணை முடிவில் குற்றவியல் சார்ந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று காவல்துறை கூறியது. அதனால் அரசாங்கத் தலைமை சட்ட அலுவலர்களிடம் காவல்துறை ஆலோசனை மேற்கொண்டது.அதில் எந்த ஒரு நடவடிக்கையும் SPH மீடியா மீது எடுக்க தேவை இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாளிதழின் விற்பனையை உயர்த்தி காட்டப்பட்டது குறித்து SPH மீடியாவின் தணிக்கை, இடர் மதிப்பீட்டு குழு மறுஆய்வு செய்யப்பட்டது. இந்தக் குழு அளித்த பரிந்துரையின் பெயரில் 2023 ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி அந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
2020 செப்டம்பருக்கு 2022 ஆம் ஆண்டிற்கும் இடையே ஆலன் அண்ட் கிலெஹில் சட்ட நிறுவனத் துணையுடன் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை நடவடிக்கையில் அன்றாட நாளிதழ் விற்பனை 82,600 என்று கண்டறியப்பட்டது.
அதற்கு 2021 ஆகஸ்ட் மாதம் தரவுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த உயர்வானது அன்றாட நாளிதழ் விற்பனை சராசரியில் கிட்டத்தட்ட 10% எனக் கூறப்படுகிறது.
இதனால் மூத்த ஊழியர்கள் பலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களிர் 4 பேர் 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சகமும் இந்த நாளிதழ் விற்பனை உயர்த்தி காட்டப்பட்ட விவகாரத் தொடர்பில் எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.