சிங்கப்பூரில் உள்ள கேமிங் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! இன்று முதல்..!!
சிங்கப்பூரில் இயங்கி வரும் கேமிங் நிறுவனமானது சிலர் கட்டண தளங்களில் இருந்து வரும் பரிவர்த்தனை கட்டணங்களை ஏற்றுக் கொள்ள உள்ளதாக ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது.
இன்று முதல் (நவம்பர் 11, 2025) PayNow மற்றும் பிற மின்னணு கட்டணம் முறைகளை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பரிவர்த்தனை கட்டணங்களை சிங்கப்பூர் கேமிங் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் கேமிங் நிறுவனங்களுடன் இணைந்து வங்கிகள், சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் மற்றும் NETS உடனே ஆனால் பரிவர்த்தனை கட்டணங்களை மதிப்பீடு செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கேமிங் நிறுவனமானது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன் மூலமாக, eNETS பரிவர்த்தனை கட்டணங்களை கூட்டாளர்களுடன் இணைந்து உள்வாங்குவதற்காக நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கணினி சரி சய்தல்களின் தேவையின் காரணமாகவே மறு அறிவிப்பை வெளியிடும் வரை eNETS கட்டணங்களை நிறுத்தி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக, நிறுவனம் ஒவ்வொரு PayNow பரிவர்த்தனைக்கும் 10 சென்ட் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலை பொதுமக்களின் கவனத்தில் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் சிங்கப்பூரில் உள்ள வங்கிகள் சங்கம், PayNow ஐப் பயன்படுத்தி பணம் செலுத்தி வரும் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதை வணிகர்கள் தடை செய்தனர்.