சென்டோசாவில் சொகுசு படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!! பணியாளர்கள் மற்றும் பயணிகள் உயிர் தப்பினரா..??

சென்டோசாவில் சொகுசு படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!! பணியாளர்கள் மற்றும் பயணிகள் உயிர் தப்பினரா..??

சென்டோசா வளைகுடாவில் ஒரு சொகுசு படகு நேற்று (ஜூன் 7) திடீரென தீப்பிடித்த பல மணிநேரம் எரிந்தது. பாதிக்கப்பட்ட படகு வாடகை நிறுவனமான ஈகிள் விங்சின் தலைவரும் நிறுவனமான ஜூலியன் தெங், திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் மிகவும் வருத்தம் அடைந்ததாகவும் பணிபுரிந்த பணியாளர்களுக்கு எந்தவித காயமும் இன்றி பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தீப்பிடித்த படகின் பெயர் ஈகிள் விங்ஸ் III என்ற யாட், ஈகிள் விங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஐந்து சொகுசு யாட்களில் ஒன்றாகும்.

புகழ்பெற்ற இத்தாலிய பிராண்டான பெரட்டியின் கஸ்டம் லைன் 112 சூப்பர்யாட் ஆன இந்த யாட்டில் இரண்டு சூட்கள், ஒரு கரோக்கி அமைப்பு, ஒரு தானியங்கி மஹ்ஜோங் மேஜை மற்றும் பிற நீர் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் உபகரணங்கள் இந்த படகில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வகை உல்லாச படகுகள் சுமார் 34 மீட்டர் நீளமும் எட்டு மீட்டர் அகலமும் கொண்டது இந்த கட்டமைப்பில் ஒரே இரவில் 10 முதல் 12 விருந்தினர்களும் கொண்டாட்டங்களுக்கு 50 விருந்தினர்கள் வரையிலும் தங்க இயலும்.

தற்போது இதே போன்ற சொகுசு படகுகள் பழைய படகுகள் சந்தையில் பொதுவாக $1.8 மில்லியன் முதல் $3.2 மில்லியன் வரை விலை பெறுகின்றன.

தீப்பிடித்து எறிந்த அந்த சொகுசு படகு சம்பவம் நடந்த நேரத்தின் போது சென்டென்டோசா கோவில் உள்ள ONE °15 வாட்டர் ஃப்ரண்ட் கிளப்பில் நங்கூரம் இடப்பட்டிருந்தது. தீ விபத்து ஏற்பட்ட உடனேயே தங்களின் அவசர கால மீட்டு குழு செயல்பட்டதாகவும் கிளப் தனது உறுப்பினர்களுக்கான அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

சொகுசு படகு தீ விபத்து ஏற்பட்டதை அடுத்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்ற உறுதி செய்யவுடன் மெரினா தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதிக்கப்பட்ட படகு நிறுத்தும் இடங்கள் மட்டும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தடைகள் நிறுவப்பட்டிருக்கின்றன.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளித்து உரிய நேரத்தில் மேலதிக தகவல்களை வழங்குவோம் என்றும் கிளப் தெரிவித்துள்ளது.

சென்டோசா மேம்பாட்டு ஆணையம் குடிமை பாதுகாப்பு படை கடல் மற்றும் துறைமுக ஆணையம் காவல்துறை கடலோர காவல்படை மற்றும் பிற தொடர்புடைய ஆதரவு முகமைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவிற்கும் இந்த கழகமானது நன்றி தெரிவித்திருக்கின்றது.

இந்த தீ விபத்தின் போது ஒத்துழைப்பு நல்கியதற்கும் விரைந்து நடவடிக்கை எடுத்ததற்காகவும் அதன் உறுப்பினர்களுக்கும் படகு ஓட்டும் சமூகத்தினருக்கும் அருகே உள்ள குடியிருப்பாளர்களுக்கும் கழகம் தனது நன்றியை தெரிவித்து இருக்கின்றது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK