சிங்கப்பூர் : உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போதைப்பொருள் கடத்த.முயற்சித்த போது மலேசியர்களைக் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மலேசிய நாட்டைச் சேர்ந்த 1 ஆணும், 1 பெண்ணும் அடங்குவர்.
அவர்களிடமிருந்து சுமார் 261 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 2261 கிராம் கஞ்சாவை ICA அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பானது $71,000 -க்கு அதிகம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த வழக்கு குறித்த ICA மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 2 மலேசிய ஆண்களும் பெண்களும் 26 மற்றும் 29 வயது உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 4- ஆம் தேதி அன்று அவர்கள் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனம் ஒன்றில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். ICA – வின் ஒருங்கிணைந்த இலக்கு நிர்ணய மையம் வழங்கிய உளவு தகவல்களின் பெயரில், ICA அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில் இந்த கடத்தல் சம்பவம் பற்றி கண்டறியப்பட்டுள்ளது.
காரின் பின்பக்கத்தில் இருந்த ஒரு முதுகுப்பையில் ஜீன்ஸ் பேண்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பிளாஸ்டிக் பையனுள் 2 கருப்பு பொட்டலங்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த பொட்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்கள் இருக்கலாம் என்று ICA அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர்.
ICA அதிகாரிகள் இந்த வழக்கை சரிபார்ப்பதற்காக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் (CNB) ஒப்படைத்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த பிளாஸ்டிக் பையில் 261 கிராம் மெத்தம் பெட்டமைனும், 2 கருப்பு பொட்டலங்களில் 2261 கிராம மதிப்புடைய கஞ்சாவும் இறந்தது தெரியவந்துள்ளது. இந்த போதைப் பொருட்களைப் 470 பேர் ஒரு வாரத்திற்கு பயன்படுத்த போதுமான அளவாகும்.
இந்த கடத்தல் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக ICA மற்றும் CNB தெரிவித்துள்ளது. மலேசியாவின் 1973 ஆண்டு போதைப் பெரும் முறைகேடு சட்டத்தின் 7- ஆம் பிரிவின் படி மலேசியாவில் 250 கிராமிற்கு அதிகமான மெத்தம்பெட்டமைன் அல்லது 500 கிராமிற்கு அதிகமான கஞ்சாவை இறக்குமதியோ அல்லது ஏற்றுமதியோ செய்தால் மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சிங்கப்பூருக்குள் போதைப் பொருட்கள் பெருமளவில் வருவதைத் தடுப்பதற்காக ICA மற்றும் CNB தொடர்ந்து இணைந்து செயல்படும் எனவும், விரும்பத்தகாத நபர்கள், ஆயுதங்கள், வெடி பொருட்கள் மற்றும் பிற கடத்தல் பொருட்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படும் எனவும் ICA தெரிவித்துள்ளது.