பதக்க மழையில் நனையும் 74 வயது மாஸ்டர்ஸ் ஓட்டப் புயல்…!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் திடல்தட வீரர் சுப்பையா, 14-ஆவது வயதில் தொடங்கிய ஓட்டப் பயணத்தை இன்று சர்வதேச மேடையில் வெற்றிகரமாகத் தொடர்கிறார்.
தற்போது 74 வயதிலும் தடம் மாறாத வேகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் மாஸ்டர்ஸ் பிரிவு திடல்தட வீரர் சுப்பையா வடிவேலு, கடந்த நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக 60-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
பள்ளி நாட்களில் திடல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர், கடின உழைப்பு மற்றும் உறுதியான மனப்பாங்கின் மூலம் தேசிய அணியில் இடம்பிடித்தார்.
பல தடைகள், காயங்கள், சவால்களை கடந்து வந்த அவர், ஒவ்வொரு போட்டியிலும் தன் சாதனைகளை மேம்படுத்தி வருகிறார்.
இளம் வயதில் தொடங்கிய ஓட்டப் பயணத்தை இன்று வரை ஆர்வமும் உறுதியும் கொண்டு தொடரும் அவர், சமீபத்திய ஜோகூர்-சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் போட்டியிலும் சிறப்பிடம் பெற்றுள்ளார்.