நான் அவன் இல்லை.. பாணியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சீன நபர்..!!

நான் அவன் இல்லை.. பாணியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சீன நபர்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மூன்று தனித்தனி கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 40 வயதுடைய சீன நபரை, இன்று (15.12.25) காலை போலீசார் மீண்டும் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தனர்.

காலை 10:56 மணியளவில், வெள்ளை சட்டை மற்றும் அடர் நீல நிற ஷார்ட்ஸ் அணிந்திருந்த அந்த நபர், மூன்று போலீஸ் அதிகாரிகளுடன் குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்பவ இடத்தில் சுமார் ஐந்து நிமிடங்கள் நீடித்த இந்த நடவடிக்கையின் போது, போலீசாரின் கேள்விகளுக்கு அவர் அவ்வப்போது பதிலளித்ததாக தெரிவிக்கப்பட்டது. போலீஸ் வாகனத்திற்காகக் காத்திருந்தபோது, ஊடக கேமராக்களைத் தவிர்க்க அவர் முதுகைத் திருப்பிக் கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை (07.12.25) மற்றும் திங்கட்கிழமை (08.12.25) குவாங் டோங் சாலை, லாய் யுயென் லேன் மற்றும் சென்டோசா பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்ததாக போலீசாருக்கு புகார்கள் கிடைத்தன. விசாரணையின் பின்னர், திங்கட்கிழமை அன்று அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

வீட்டு உரிமையாளர் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து நகைகள் திருடப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. அவரிடமிருந்து S$1,000 ரொக்கம், நான்கு EZ-Link அட்டைகள், ஒரு தொப்பி மற்றும் ஒரு விக் ஆகியவற்றை போலீசார் மீட்டுள்ளனர். இந்த வழக்கில், இந்த மாதம் 10ஆம் தேதி அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK