தரையில் பூசப்பட்ட பெயிண்டால் பெண்ணுக்கு நேர்ந்த விளைவு..!!

தரையில் பூசப்பட்ட பெயிண்டால் பெண்ணுக்கு நேர்ந்த விளைவு..!!

சிங்கப்பூர்: யிஷூன் அவென்யூ 5, பிளாக் 701 முன்னிலை திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் ஒரு பெண் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தகவலின் படி, இந்தச் சம்பவம் நேற்று முன் தினம்(18.01.26) பிற்பகல் 1:50 மணியளவில் ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்காக பாதிக்கப்பட்ட பெண்ணை கூ டெக் புவாட் மருத்துவமனையில் அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. அவற்றில், HDB தொகுதி முன் நிறுத்தப்பட்ட இரண்டு கார்களுக்கு இடையில் பூசப்பட்டிருந்த வெள்ளை நிற பெயிண்ட் மீது அந்தப் பெண் அமர்ந்திருந்ததும் ,அவரது தலைமுடி மற்றும் உடைகள் வெள்ளை நிற பெயிண்டால் மூடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.

சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் சம்பவத்தை கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது

.

மேலும் இது போன்று வாகன நிறுத்துமிடங்களில் பூசப்பட்ட ஈரமான பெயிண்டால் பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும் என்பதால், பயணிகள் மற்றும் HDB குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளதாக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் குறைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

Follow us on : click here 

 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

 

WHATSAPP CHANNEL LINK

 

https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

 

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

 

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

 

Telegram : https://t.me/tamilansg

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.