இணையத்தில் வைரலாகும் சட்டை..!! விலை எவ்வளவு தெரியுமா..??
சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த ஆடை நிறுவனம் Vetements -இல் விற்பனைக்கு வைத்துள்ள ஒரு வெள்ளை சட்டை தான் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
சாதாரணமாக இஸ்திரி போடும்போது கருகிப்போன சட்டையை நாம் அணியத் தயங்குவோம். ஆனால் அதே கருகிப்போன சுவடு கொண்ட சட்டையை “டிசைன்” ஆக மாற்றி இந்த நிறுவனம் 1,139 அமெரிக்க டாலர் (ரூ.1,03,221)விலையில் விற்பனை செய்கிறது.
சட்டையின் இடது மார்புப் பையில் இஸ்திரிப் பெட்டியால் ஏற்பட்டது போல கருகிய சுவடு அச்சிடப்பட்டுள்ளது.இந்த விநோதமான வடிவமைப்பு குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளிவந்துள்ளன.
இது குறித்து சிலர் “ஆடை வடிவமைப்பாளர்களுக்கு புதிய யோசனைகள் இல்லையா?” என்று கேள்வி எழுப்ப, மற்றவர்கள் கேலி கலந்த கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர்.“இதுபோன்ற சட்டையை என் தாயார் இலவசமாக செய்து தருவார்,” என்று ஒருவர் குறிப்பிட்டார்.
இன்னொருவர், “இஸ்திரிபோடும்போது சட்டை கருகிவிட்டால், Vetements-இலிருந்து வாங்கினேன் என்று சொல்லிவிடலாம்!” என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.