அற்புத சாதனை செய்த சிங்கப்பூர் லயன்ஸ் கிளப்..! காரணம் இதுதான்..!

அற்புத சாதனை செய்த சிங்கப்பூர் லயன்ஸ் கிளப்..! காரணம் இதுதான்..!

சிங்கப்பூர்: லயன்ஸ் சேவை தினம் மற்றும் கண் பராமரிப்பு தினத்தை முன்னிட்டு, சிங்கப்பூரில் உள்ள லயன்ஸ் கிளப்புகளின் உறுப்பினர்கள் இந்த வார இறுதியில் ஒன்றுகூடியனர். மாவட்ட ஆளுநர் சீ லையு தொடங்கிய இந்த முயற்சியின் மூலம், சமூக சேவை மற்றும் பராமரிப்பில் லயன்ஸ் மனப்பான்மையை வெளிப்படுத்துவதே நோக்கம்.

மேக்பெர்சன் சமூக கிளப்பில் நேற்று (04.10.25) மற்றும் இன்று (05.10.25)சுமார் 300 பேர் இணைந்து மூன்கேக்குகளை தயாரித்து, இரண்டு நாளில் 45,000 மூன்கேக்குகளை தயாரிப்பதே இலக்கு எனத் தமது சாதனைக்கான எண்ணிக்கையை சீ லையு சுட்டிக்காட்டினார்.

மேலும், 20க்கும் மேற்பட்ட கிளப்புகள் தீவின் பல பகுதிகளில் சமூக சேவைகளை மேற்கொண்டன.தோட்டங்கள் மற்றும் கடற்கரைகளில் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள், யியோ சூ காங்கில் இலவச கண் பரிசோதனைகள் மற்றும் கண்ணாடி சேவைகள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்நிகழ்வை முன்னிட்டு, மூன்கேக்குகளை பெரியவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுடன் பகிர்ந்துகொண்டு திருவிழா முறையில் கொண்டாடினர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK