சிங்கப்பூரில் கோலாகலமாக தொடங்கிய தைப்பூச திருவிழா..!!!

சிங்கப்பூரில் கோலாகலமாக தொடங்கிய தைப்பூச திருவிழா..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய இந்து திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசத் திருவிழா இன்று(01.02.26) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

இன்று அதிகாலை முதலே பக்தர்கள் திரளாகச் சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் கூடினர். அங்கிருந்து டேங்க் ரோட்டிலுள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி முருகன் ஆலயத்தை நோக்கி, காவடிகளும் பால்குடங்களும் ஏந்தியபடி ஊர்வலம் தொடங்கியது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட 25 முதல் 30 விழுக்காடு வரை கூடுதல் பக்தர்கள் வருகை தருவார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மொத்தமாக 19,000க்கும் அதிகமான பால்குடங்களும், 349 காவடிகளும் செலுத்தப்படுகின்றன.

காலை 9.40 மணி நிலவரப்படி 162 காவடிகள் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து புறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பு, ஒழுங்குமுறை மற்றும் மருத்துவ உதவிகளுக்காக சுமார் 2,000 தொண்டூழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஊர்வலப் பாதையில் மூன்று இடங்களில் இசை முனையங்கள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு ஆன்மிக உற்சாகத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்கள் ஒழுங்காக ஊர்வலத்தில் கலந்து கொள்ளவும், அதிகாரிகள் மற்றும் தொண்டூழியர்களின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று இரவு 11.30 மணிக்குள் அனைத்து பக்தர்களும் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலைச் சென்றடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தைப்பூசத் திருவிழா பக்தி, தியாகம் மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக சிங்கப்பூரில் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK