வியட்நாமிய பெண் செய்த விவகாரமான திருமணம்…!! நீதிமன்றம் கொடுத்த தண்டனை..??

வியட்நாமிய பெண் செய்த விவகாரமான திருமணம்…!! நீதிமன்றம் கொடுத்த தண்டனை..??

சிங்கப்பூர்: வியட்நாமில் தனது முதல் திருமணத்தை சட்டபூர்வமாக முறித்துக்கொள்ளாமல் மறுமணம் செய்து குழந்தை பெற்ற பின்னர், அந்தத் திருமணத்தை உள்ளூரில் பதிவு செய்துள்ளார்.

இதனால் வியட்நாமியப் பெண்ணுக்கு இருதார மணம் செய்த குற்றத்திற்காக 12 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

36 வயதான நுயென் தி புவாங் துய், 2008 ஆம் ஆண்டு தன்னை விட 35 வயது மூத்த சிங்கப்பூர் ஆணை திருமணம் செய்துகொண்டார். 2012 ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக வியட்நாமுக்குத் திரும்பிய அவர், அங்கு மற்றொரு வியட்நாமிய ஆணுடன் காதல் உறவில் ஈடுபட்டார்.

அந்த நேரத்தில் சிங்கப்பூரில் ஏற்கனவே திருமண பந்தத்தில் இருந்ததை இருவரும் அறிந்திருந்த போதிலும், 2015 ஜூலை 28 அன்று வியட்நாமில் அவர்களது திருமணத்தை பதிவு செய்தனர். பின்னர் அந்தப் பெண் பெரும்பாலும் வியட்நாமிலேயே தங்கி, விசிட்டர் பாஸ் மற்றும் நீண்டகால வருகைப் பாஸ் புதுப்பிக்க மட்டும் சிங்கப்பூர் திரும்பியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் முதல் திருமணத்திற்கு விவாகரத்து கோரி விண்ணப்பித்த அவர், அந்தத் திருமணம் 2017 நவம்பரில் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. வியட்நாமில் இரண்டாவது திருமணம் 2018 மார்சில் முடிவடைந்தது.

மேலும், குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்திடம் குழந்தைகள் இல்லை என பொய் தகவல் அளித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளும் தண்டனை நிர்ணயத்தில் கருத்தில் கொள்ளப்பட்டன.
நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் மூலம் வாதிட்ட அந்தப் பெண், தாம் தனித்த தாயாக பத்து வயது மகனை பராமரித்து வருவதாகவும், வயதான பெற்றோர்களை கவனிக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.எனவே நீதிபதி அரசு தரப்பு கோரியதை விட சற்றே குறைவான தண்டனையாக 12 வார சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

சிங்கப்பூரில் இருதார மணம் ஒரு குற்றமாகும். இதற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK