டிரேடிங் நிறுவனருக்கு 17.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!! என்ன காரணம்..??

டிரேடிங் நிறுவனருக்கு 17.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!! என்ன காரணம்..??

சிங்கப்பூர்: Hin Leong Trading நிறுவனரான லிம் ஊன் குயின் அவர்கள் என்னை விற்பனை தொடர்பான இரண்டு போலி பரிவர்த்தனைகளை செய்து HSBC வங்கியிடம் போலி ஆவணங்களை காட்டி 150 மில்லியன் வெள்ளியை கடனாக பெற்றுள்ளார்.

HSBC வங்கியை ஏமாற்றிய குற்றத்திற்காகவும் கையெழுத்து மோசடி குற்றத்தில் உடந்தையாக இருந்ததற்காகவும் இவர் மீது மொத்தமாக மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட குற்றமும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

இந்தக் குற்றத்திற்காக 2024 நவம்பர் 18ஆம் தேதி வரையில் 84 வயதாகும் லிம் அவருக்கு 17.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை எதிர்த்து லிம் மேல்முறையீடு செய்தார். ஆனால் நீதிபதி அவரது மேல்முறையீட்டை நிராகரித்தார்.

மேலும் அவருடைய வயதை கரத்தில் கொண்டு மீண்டும் அவர் குற்றம் புரிய வாய்ப்பு குறைவாக இருப்பதன் காரணத்தினால் சிறை தண்டனை காலத்தை நான்கு வருடங்கள் குறைவதாக தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டு இருக்கிறார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK