மலேசிய நெடுஞ்சாலையில் துயரம்..!! கார் மோதி 20 வயது இளைஞர் பலி..!!

மலேசிய நெடுஞ்சாலையில் துயரம்..!! கார் மோதி 20 வயது இளைஞர் பலி..!!

மலேசியாவில் 70 வயது முதியவர் குடியிருப்புப் பகுதியில் தனது SUV வாகனத்தை நெடுஞ்சாலையில் ஓட்டி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்ததில், எதிர் திசைப் பாதைக்கு திரும்பி ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

அதில் அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அவரின் உடல் நிலையை காரணத்தால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தானது மே 5- ஆம் தேதி அன்று பிற்பகல் 1:45 மணி அளவில் பெட்டாலியன் ஜெயா பகுதியில் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்த காணொளி ஆனது இணையத்தில் பரவி வருகிறது. அந்த காணொளியில் ஒரு புரோட்டான SUV குடியிருப்பப் பகுதி வழியாக அதிவேகமாகச் சொல்வது தெரிகிறது.

பின்னர் அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசை பாதிக்குள் விலகி செல்கிறது. எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது அது பலமாக மோதுவதும் தெரிகிறது.

கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காற்றில் தூக்கி எறியப்பட்டுள்ளார். விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். 70 வயது முதியவருக்கு இந்த விபத்தில் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து பெட்டாலின் ஜெயா மாவட்ட காவல்துறை உதவி ஆணையர் ஷம்சுதீன் மஹ்மூத் கூறியதாவது, வாகன ஓட்டுநர் 70 வயதான உள்ளூர்வாசி எனவும், அவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர் திசை பாதைக்குள் சென்றதால் இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் 20 வயது உணவு விநியோகம் செய்பவர் ஆவார். கார் ஓட்டுநர் முதியவர் என்பதால் அவரின் உடல்நல குறைபாடு காரணமாக விசாரணையை முடித்த பின்னர் காவல்துறை அவரை ஜாமினில் விடுவித்தது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK