மலேசியாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்...!! பேருந்து
ஜாலான் கென்டிங் ஹைலண்ட்ஸ்-கென்டிங் சாம்பா சாலை நெடுகில் 2 சுற்றுலா பேருந்துகளும் ஒரு காரும் சிக்கிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் ஆனது சனிக்கிழமை(மே 30) நிகழ்ந்துள்ளது.
இது குறித்த தகவல் ஆனது மாலை 5:29 மணி அளவில் பாகாங் தீயணைப்பு மீட்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து மாலை 6:06 மணி அளவில் கென்டிங்-ஹைலண்ட்ஸ் தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
ஒரு சுற்றுலா பேருந்தில் மொத்தம் 36 நேப்பாளப் பயணிகள் இருந்துள்ளனர். அதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் மீதமுள்ளவர்களை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளதாக மீட்புப் பிரிவின் உதவி இயக்குநரான முகமது சலாலுதீன் இசா அவர்கள் தெரிவித்துள்ளார்.
மற்றொரு சுற்றுலா பேருந்தில் இருந்த பங்களாதேஷ் மற்றும் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் காரில் பயணம் செய்த 3 பேரில் ஒருவருக்கு காயமடைந்துள்ளது. தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்பே அனைத்து வாகனங்களில் இருந்தும் அனைவரும் வெளியேறிவிட்டனர்.
முதல் பேருந்து ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்து ஒரு காரின் மீது பின்புறத்தில் மோதி, அதற்கு பின்னர் இரண்டாவது பேருந்தின் பின்புறத்தில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த மோதலில், இரண்டாவது விரைவு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறத்தில் சறுக்கி கவிழ்ந்துள்ளது.
முதல் பேருந்து தான் இந்த விபத்திற்கு காரணம் என்று நம்பப்படுவதால், காவல்துறையினர் அந்த பேருந்தின் ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.