திருச்சி பயணிகளே..!! உங்களுக்கு உதவ சிங்கப்பூர் உள்ளது..!!
திருச்சியில் இருந்து இண்டிகோ விமான மூலமாக ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாட்டிற்கு பயணம் வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி – ஆஸ்திரேலியா மற்றும் திருச்சி – ஜப்பான் இடையிலான பயணிகளின் அளவானது அதிகரித்து வருவதால் ஒரே புக்கிங் இல் இந்த நாட்டிற்கு செல்வதற்கு நவம்பர் 16ஆம் தேதி முதல் இந்த விமான சேவையை தொடர உள்ளதாக indigo நிறுவனம் ஆனது முடிவெடுத்துள்ளது.
திருச்சியில் இருந்து புறப்பட்ட சாங்கி விமானம் சென்றடைந்து (4 மணி நேரம் முதல் 8 மணி நேர Layerover க்கு) அதன் பிறகு அங்கிருந்து மேற்கூறிய இரண்டு நாடுகளுக்கும் மக்கள் பயணம் செய்யலாம்.
இந்த புதிய சேவையின் மூலமாக திருச்சியிலிருந்து பயணிகள் இனி சுலபமாக சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாட்டிற்கு செல்ல முடியும்.