CPF உறுப்பினர்கள் நிம்மதி..!! உடனடியாக அமலுக்கு வந்த 2 பாதுகாப்பு விதிமுறைகள்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மத்திய வருங்கால வைப்பு நிதி (CPF) வாரியம்,உறுப்பினர்களின் கணக்குகளை பாதுகாக்க,இரண்டு புதிய மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்துள்ளது.இந்த நடவடிக்கைகள்அதிகரித்து வரும் நிதி மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக CPF வாரியம் தெரிவித்துள்ளது.
‘நம்பகமான தொடர்பு அறிவிப்பு சேவை’ என்ற புதிய வசதியின் மூலம், 21 வயதுக்கும் மேற்பட்ட CPF உறுப்பினர்கள் இரண்டு நம்பகமான நபர்களை அறிவிப்பு பெறுநர்களாக நியமிக்கலாம். முக்கியமான பரிவர்த்தனைகள் நடைபெறும் போது, அந்த உறுப்பினருடன் சேர்த்து நியமிக்கப்பட்டவர்களுக்கும் ஒரே நேரத்தில் அறிவிப்பு அனுப்பப்படும்.
இந்த சேவை, சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை உடனடியாக கண்டறிந்து தலையிட உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மோசடி சந்தேகம் ஏற்பட்டால், வங்கிக் கணக்குகளை முடக்குதல், Singpass மீட்டமைத்தல், CPF கணக்கு பாதுகாப்பு அமைப்புகளை இயக்குதல் மற்றும் காவல்துறையில் புகார் அளித்தல் போன்ற நடவடிக்கைகளில் நியமிக்கப்பட்டவர்கள் உதவ முடியும்.
மேலும், 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்காக ‘CPF பாதுகாப்பு சுவிட்ச்’ என்ற கணக்கு பாதுகாப்பு அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது செயல்படுத்தப்பட்டவுடன், CPF இணைய சேவைகள் முடக்கப்படும்.பணம் எடுப்புகள் மற்றும் வங்கிக் கணக்குகளுக்கான பணப்பரிவர்த்தனைகள் உடனடியாக நிறுத்தப்படும்.
ஆனால் CPF பங்களிப்புகள், வீட்டு வசதி மற்றும் காப்பீடு தொடர்பான வழக்கமான கட்டணங்கள் தொடர்ந்து நடைபெறும். இதன் மூலம் உறுப்பினர்களின் சேமிப்புகள் பாதுகாக்கப்படுவதுடன், அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கும் என CPF வாரியம் தெரிவித்துள்ளது.
மோசடிகளைத் தடுப்பதில் பொதுமக்களின் விழிப்புணர்வே முக்கியம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். CPF பெயரில் வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது WhatsApp செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என்றும், CPF 6227 1188 என்ற எண்ணிலிருந்து மட்டுமே அழைப்புகள் வரும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உறுப்பினர்கள் தங்கள் தொடர்பு விவரங்களை எப்போதும் புதுப்பித்து வைத்திருக்க வேண்டும் என்றும் CPF வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
