சிங்கப்பூரில் எதிர்பாராத வாகன விபத்து..!!

சிங்கப்பூரில் எதிர்பாராத வாகன விபத்து..!!

சிங்கப்பூரில் சமீபமாக ஒரு பரபரப்பான சம்பவம் ஏற்படுத்தக்கூடிய வாகன விபத்து ஏற்பட்டது. ஆங் மோ கியோ அவன்யூ 1 இல் பழுப்பு நிற செடான் கார் போக்குவரத்து விதிகளை மீறி கடந்து சென்றது.

ஒரு பழுப்பு நிற செடான் கார் திடீரென பாதையை மாற்றுவதற்காக இரட்டை வெள்ளை கோடுகளை சட்டத்திற்கு புறம்பாக எப்பவும் எங்கம்மா அடிப்பேன் பாதையை மாற்றி கடந்து சென்றது.

இதனை அடுத்து வந்த ஒரு சாம்பல் நிற செடான் கார் சட்டவிரோதமாக கடந்து வந்த காரின் மீது மோதலை தவிர்க்க முடியாமல் திடீரென ஒருபுறம் சாய்ந்து சிறிது நேரத்திற்கு பிறகு தரையில் இருந்து மேல் எழும்பியது.

நேராக அந்த பழுப்பு நிற செடான் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. பலத்த மோதலால் சாம்பல் நிற செடான் கார் அதிர்ஷ்டவசமாக கீழே தவறாமல் மீண்டும் சாலையில் பலமாக வந்து விழுந்தது.

இந்த சாலை விபத்து குறித்த காணொளியானது SGRV ADMIN என்ற சமூக ஊடகப் பக்கமான முகநூலில் பதிவிடப்பட்டிருந்தது.

இந்த காணொளி பதிவின்படி இந்த விபத்தானது கடந்த புதன்கிழமையான ஏப்ரல் 1 அன்று ஆங் மோ கியோ அவன்யூ 1 இல் நடந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த சாலை விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் காவல்துறையினருக்கும் அறிக்கையாக கிடைத்துள்ளது எனவும், இது குறித்த விசாரணை தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK