அமெரிக்க பங்கு சந்தைகள் வால் ஸ்ட்ரீட்டில் அனைத்து துறைகளிலும் உயர்ந்துள்ளன. தொழில்நுட்ப பங்குகளின் செயல்திறனை பிரதிபலிக்கும் எஸ்&பி 500 மற்றும் நாஸ்டாக் ஆகிய இரண்டும் தொடர்ந்து இரண்டாவது வர்த்தக நாளாக சாதனை படைத்து உச்சத்தை எட்டி உள்ளது.
எஸ்&பி 500 18 என்ற புள்ளிகள் உயர்ந்து 7041 ஆகவும்; நாஸ்டாக் 87 புள்ளிகள் அதிகரித்த 24, 103 ஆகவும் மற்றும் டவுன் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரியாக 115 புள்ளிகள் உயர்ந்து 48,578 புள்ளிகளாகவும் உயர்ந்திருக்கின்றன.
நாஸ்டாக் தற்போது தொடர்ந்து 12 வர்த்தக நாட்களாக உயர்ந்து வருகிறது. இதில் ஜூலை 2009 இல் உலகளாவிய நிதி நெருக்கடி தொடங்கியதிலிருந்து அதன் மிக நீண்ட தொடர் உயர்வாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான 10 நாள் போர் நிறுத்தம் ஒப்பந்தமும் வார இறுதியில் ஈரான் உடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கக்கூடும் என்று அமெரிக்காவின் அறிகுறிகளும், மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை முடிவுக்கு வந்திருக்கலாம் என்று சந்தை பங்கேற்பாளர்களை நம்ப வைத்ததாகவும் இது பங்குச்சந்தை உயர்வுக்கு மிகுந்த ஆதரவளித்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.